Connect with us

Cinema News

மாமன்னன் ரத்தினவேலுவுக்கு தனி படம் வேணுமா?.. இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாமே!..

மாமன்னன் படத்தை என்ன நோக்கத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கினாரோ அந்த நோக்கமே மாறிடுச்சு என மாரி செல்வராஜின் ரசிகர்களே அவரை திட்டும் அளவுக்கு மாமன்னன் படத்தின் வில்லன் கதாபாத்திரமான ரத்தினவேல் கதாபாத்திரம் வைரலாகி வருகிறது.

சின்னக் கவுண்டர் பாடல் முதல் பல சாதிய அடையாளங்கள் கொண்ட பாடல்களை கொண்டு சமூக வலைதளங்கள் முழுவதும் பகத் ஃபாசில் நடித்த மாமன்னன் படத்தின் காட்சிகளை ரசிகர்கள் எடிட் செய்து அலப்பறையை கிளப்பி உள்ளனர்.

இதில், கொடுமை என்னவென்றால் ரத்தினவேல் கதாபாத்திரத்துக்கு மட்டும் ஸ்டாண்ட் அலோன் படம் வேண்டும் என இயக்குநர் மாரி செல்வராஜிடமே ரசிகர்கள் கேட்பதும், நெட்பிளிக்ஸ் டிரெண்டிங்கில் இடம் பிடித்த சந்தோஷத்தில் மாரி செல்வராஜும் பகத் ஃபாசிலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்திருப்பது தான்.

பகத் ஃபாசிலை போட்டதே தப்பு:

உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் நடித்த மாமன்னன் திரைப்படத்தில் பகத் ஃபாசிலை இயக்குநர் மாரி செல்வராஜ் காஸ்டிங் செய்திருக்கவே கூடாது என்றும் அதன் விளைவு தான் இப்படி ஹீரோவுக்கு பதில் வில்லன் டிரெண்டாகி வருகிறார் என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும், அப்படியே பகத் ஃபாசிலை போட்டு இருந்தாலும், அவருக்கு இணையான ஒரு ஹீரோவை படத்திற்கு கொண்டு வந்திருக்கணும், அதற்கு பதில் உதயநிதி ஸ்டாலினை நடிக்க வைத்த நிலையில் தான் ரசிகர்கள் ரியல் மாமன்னனாக பகத் ஃபாசிலை கொண்டாடி வருகின்றனர் என கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சோஷியல் மீடியா முழுக்க ரத்தினவேல் தான்: 

நெட்பிளிக்ஸ் ஓடிடியில் மாமன்னன் படம் வெளியான நிலையில், பகத் ஃபாசிலின் காட்சிகளை எடிட் செய்து ஒரு சாதியினர் மாஷ் அப் வீடியோ ஒன்றை வைரலாக்க, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சாதிக் கட்சியினரும் தங்கள் பங்குக்கு ஒரு எடிட்டை பகத் ஃபாசிலை வைத்து செய்து இயக்குநர் மாரி செல்வராஜின் மாமன்னன் படத்தை எந்தளவுக்கு கருத்தியல் ரீதியாக சிதைக்க முடியுமோ அந்தளவுக்கு சிதைத்து வருகின்றனர்.

பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்: 

தேவர்மகன் படத்தில் இடம்பெற்ற “போற்றிப் பாடடி” பெண்ணே பாடல் சாதிய கலவரங்களை தூண்டியதாக பேசிய மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தில் பகத் ஃபாசில் கதாபாத்திரத்துக்கு இப்படியொரு வெயிட்டான காட்சிகளை வைத்ததன் விளைவு தற்போது படத்தில் கஷ்டப்பட்டு சிரிக்காமல் நடித்த மாமன்னன் வடிவேலுவையும் ஆதிவீரனாக நடித்த உதயநிதி ஸ்டாலினையும் ஓரங்கட்டி விட்டு “கண்ணுப்பட போகுதய்யா சின்னக் கவுண்டர்” என்றும் தேவர், நாடார், செட்டியார் என்றும் பகத் ஃபாசில் நடித்த ரத்தின வேலுவை ராஜாவாக்கி விட்டனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top