விஜயால் பொங்கினாரா அஜித் இயக்குனர்.. நடந்ததே வேற? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!

by Akhilan |   ( Updated:2024-08-18 07:28:51  )
விஜயால் பொங்கினாரா அஜித் இயக்குனர்.. நடந்ததே வேற? இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல!
X

Goat Movie: விஜயின் கோட் டிரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் விடாமுயற்சி டிரெய்லர் தெறிக்க விடலாம் என மகிழ் திருமேனி போஸ்ட் வைரலாகி இருக்கும் நிலையில் அதன்பின்னால் வேறொரு விஷயம் மறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. இப்படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்கிறார். விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், லைலா, சினேகா, மோகன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: மீண்டும் மீனா-முத்து சண்டை.. பாண்டியனின் காமெடி… வீட்டுக்கு வருவாரா எழில்? அடுத்த வாரம் இதான்!..

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியான நிலையில் ரசிகர்களிடம் விமர்சனத்தினையே குவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் கோட் படம் கோட்டை விடுமா என்ற கேள்வியில் இருந்தனர்.

இந்நிலையில் கோட் டிரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. மீம்கள், போஸ்டர்கள் என தெறிக்கவிட்டு இருக்கும் நிலையில் இயக்குனர் மகிழ்திருமேனி நம்ம டிரெய்லரெல்லாம் பட்டாசா இருக்கும். கவலைப்படாதீங்க விடாமுயற்சி என்ற ஹேஸ்டேக்குடன் போஸ்ட் போட்டு இருந்தார்.

இதையும் படிங்க: இது நம்ம பில்டிங் இல்லயா?!. 10 வயதில் மகன் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன விஜயகாந்த்…

இந்த போஸ்ட்டை அஜித் ரசிகர்கள் வைரலான நிலையில், விடாமுயற்சி இயக்குனர் பக்காவா இருக்காரே எனவும் கிசுகிசுத்தனர். இந்நிலையில் மகிழ் திருமேனியிடம் ட்விட்டர் கணக்கே இல்லையாம். இருந்து அவர் பெயரில் உலா வரும் இந்த கணக்கில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு அதிகமாக ஃபாலோ செய்து வருகின்றனர்.

இதை விசாரிக்கும் போது, மகிழ் திருமேனிக்கு ட்விட்டர் இல்லை. லைகா நிறுவனம் கூட விடாமுயற்சி குறித்து அப்டேட் போடும் போது அஜித்குமார் மற்றும் மகிழ் திருமேனி இருவருக்கும் ஹேஸ்டேக் மட்டுமே போட்டு இருக்கின்றனர். இதை கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள் ஃபேக் ஐடிக்கா இவ்வளவோ சீனு எனவும் கலாய்த்து வருகின்றனர்.

Next Story