Mahabharatham: இந்திய மொழி சினிமாவில் வரலாற்று கதைகளுக்கு எப்போதுமே ஒரு கிராஸ் இருக்கும். அதை எத்தனை முறை படமாக்கினாலும் ஆவலுடன் பார்க்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி தான் பாலிவுட்டில் மீண்டும் மகாபாரதம் கதை மீண்டும் படமாக்க இருக்கிறது.
ராமாயணம் கதையை ஏற்கனவே பலமுறை இயக்கி இருந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியானது ஆதிபுருஷ் திரைப்படம். ஆனால் படத்திற்கு வரவேற்பு கிடைப்பதற்கு பதில் நிறைய நெகட்டிவ் ரெஸ்பான்ஸே தான் அதிகமாக இருந்தது.
இதையும் படிங்க: கமலின் அந்த சூப்பர்ஹிட் பாடல்… 60களில் எழுதிய கவிதையா? பிரபலம் சொன்ன தகவல்
இப்படத்தில் கர்ணனின் கதை மையமாக வைத்து இரண்டு பாகமாக உருவாக இருக்கிறது. முக்கியமாக படத்தில் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அதுகுறித்த அறிவிப்பு விரைவில் படக்குழுவால் அறிவிக்கப்படும் என படத்தின் கதாசிரியரும், எழுத்தாளருமான ஆனந்த் நீலகண்டன் தெரிவித்து இருக்கிறார்.
தற்போது சூர்யா, சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை முடித்து விட்டு சுதா கொங்கரா படத்திலும், வாடிவாசல் படத்திலும் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அறிவிப்புகள் இதுவரை வெளியாகவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வீக் எண்டுக்கு இது செம ட்ரீட்டு!.. ரிப்பீட் மோடில் ரசிக்க வைக்கும் ரித்திகா சிங்…
