Cinema History
மகாராஜா படம் 10 சித்தாவுக்குச் சமமாம்..! ரசிக்கறதுக்கு இவ்ளோ விஷயம் இருக்கா?
விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் நேற்று வெளியானது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிப்படத்தைப் பார்த்த திருப்தி என்கிறார்கள். விஜய் சேதுபதியின் கெரியரில் இது ஒரு மைல் கல். படத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி சலூன் கடையில் வேலை பார்க்கிறார். அவருக்கு ஒரு பொண்ணு இருக்கிறார். இதை மையமாக வைத்து வேற லெவலில் கதை ரெடி பண்ணியிருக்காங்க. அதுவும் மிரட்டலாக. கொரியன் மூவின்னா திரில்லிங்கா இருக்கும். அப்படி ஒரு திரைக்கதை மிரட்டலைத் தந்துள்ளார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன். இவர் ஏற்கனவே குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க… SK போட்ட ரூட் கிளியரா இருக்கே… சூரி காட்டுல இனி மழை தான்..!
‘என் வீட்டுல இருக்குற லட்சுமியைக் காணோம்’ என காவல்நிலையத்தில் விஜய் சேதுபதி முறையிடுற சீன் செம காமெடி.
கடைசில பார்த்தா அது ஒரு குப்பைத்தொட்டியோட பேரு. இதை எதுக்குத் தேடி கம்ப்ளெய்ண்ட் கொடுக்காரு. லூசா இருப்பாரோ என்று பார்த்தால் அங்கு தான் நிற்கிறார் இயக்குனர். அதே போல இது ஒரு வயிறு குலுங்க வைக்கும் பிளாக் ஹ்யூமர் படம். அதே நேரம் இது சூது கவ்வும் மாதிரியும் கிடையாது. வேற லெவலில் படம் மாறுகிறது.
இடைவேளை வரை பிட்டு பிட்டாகச் செல்லும் படம் அதற்குப் பிறகு படம் மாஸாக வருகிறது. இந்தப் படத்தை நாம் மகிழ்ச்சியாகப் பார்க்க முடியாது. 2 மணி நேரம் அப்படிப் பார்க்கலாம்.
விஜய் சேதுபதியின் நடிப்பு அடுத்த கட்டத்திற்குச் செல்கிறது. சூதுகவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பீட்ஷா படத்தில் பார்த்த விஜய்சேதுபதியை மீண்டும் பார்க்கலாம். அவரது நடிப்பில் சமீப காலமாக வில்லனாக தான் நாம் பார்த்து வந்தோம். பழைய விஜய் சேதுபதியைப் பார்க்க முடியவில்லையே என ஏங்கியவர்களின் தாகத்தைத் தீர்த்து வைக்கிறது இந்தப் படம்.
போலீஸ் ஸ்டேஷனில் விஜய் சேதுபதி இருக்கும் முதல் காட்சிக்கும், கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரையும் படத்தின் தொடர்பு வருகிறது. திரைக்கதையை அவ்வளவு அருமையாகச் சொல்லி இருக்கிறார். படத்தில் மையக்கரு இதுதான். சூழ்நிலை தான் ஒரு மனிதனை நல்லவனாகவும், கெட்டவனாகவும் மாற்றுகிறது என்று நிரூபிக்கிறார் இயக்குனர்.
எஸ்.ஐ.யாக வரும் அருள்தாஸ், இன்ஸ்பெக்டராக வரும் நட்டியின் நடிப்பு எல்லாமே செமயாக உள்ளது. விஜய் சேதுபதிக்கு அருமையான கம்பேக் இது.
படத்தில் வில்லனாக அனுராக் காஷ்யப் வருகிறார். ஈவு இரக்கம் இல்லாத கொடூரமான கதாபாத்திரம் அப்படியே கண்முன் காட்டப்பட்டுள்ளது. சிங்கம்புலியின் கேரக்டர் அவர் மேல் நமக்கு கொலைவெறியைத் தூண்டுகிறது. பாய்ஸ் மணிகண்டனும் அருமையாக நடித்துள்ளார். அபிராமி, மம்தா மோகன் என அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தைக் கச்சிதமாக நடித்துள்ளனர்.
அடுத்தடுத்து என்ன வரும் என்று யூகிக்கவே முடியாது. விறுவிறுப்பான சீரியஸான படம் தான். ஆனாலும் போகிற போக்கில் காமெடி வருகிறது. காதல் காட்சி, பாடல் எதுவுமே இல்லை. யதார்த்தமான சண்டைக்காட்சிகளைப் பார்க்க முடிகிறது. சித்தா படத்தைப் போல மொத்தத்தில் 10 மடங்கு தாக்கத்தை உண்டாக்குகிறது மகாராஜா படம்.