More
Categories: Cinema News latest news

பிரபாஸோட அடுத்த பட ஹீரோயின்!.. தியேட்டரில் எப்படி ரசிகர்களிடம் சிக்கியிருக்காங்கன்னு பாருங்க!

சலார் படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன் நடித்தாலும் ஒரு டூயட் பாடலோ, ரொமான்ஸ் காட்சியோ இடம்பெறவில்லை. மைம் கோபியுடன் காரில் சென்றுக் கொண்டு சலார் கதை சொல்வது போல ரசிகர்களுக்காக படத்தில் ஸ்ருதிஹாசன் கதை கேட்கும் கதாபாத்திரம் மட்டும் தான். பாகுபலி படத்தில் எப்படி தமன்னாவை டோட்டல் டேமேஜ் செய்தார்களோ அதை விட மோசமாக ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தை வைத்து அவரே சரக்கு வேண்டும் என ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி கேட்கும் சீனெல்லாம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பிரபாஸ் நடித்து வரும் அடுத்த படமான மாருதி படத்தில் அவருடன் ஜோடியாக நடித்து வரும் நடிகை மாளவிகா மோகனன் மும்பையில் சலார் படத்தை பார்க்க தனியாக சென்ற போது ரசிகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டு சுத்துப் போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர். பெரிய பாடிகார்ட் எல்லாம் அழைத்துச் செல்லாமல் ஒரே ஒரு அசிஸ்டன்ட் உடன் தியேட்டருக்குச் சென்று படத்தை பார்த்து விட்டு வந்துள்ளார் மாளவிகா மோகனன்.

Advertising
Advertising

இதையும் படிங்க: லியோவை லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த பிரபாஸ்!. சலார் படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

மாருதி பட ஹீரோயின் அவங்க என்றும் மாஸ்டர் நாயகி என்றும் இந்தி ரசிகர்கள் மாளவிகா மோகனனை அடையாளம் கண்டு கொண்டு செல்ஃபி எடுத்ததும் சந்தோஷப்பட்ட மாளவிகா மோகனன் தொடர்ந்து பல ரசிகர்களுடன் போட்டோக்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகி உள்ள தங்கலான் படம் ஜனவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் மாத இறுதியில் தான் படம் வெளியாகும் என்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: நடிகையெல்லாம் உன்கிட்ட தோத்து போகணும்!. டிடியின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்..

Published by
Saranya M

Recent Posts