---Advertisement---

மாநகரம் படத்தில் நடிக்க இருந்த தொகுப்பாளர்!… உங்களுக்கு என் படம் மொக்கை… லோகேஷா இப்படி சொன்னாரு?

Published on: January 27, 2024
---Advertisement---

Lokesh Kanagaraj: தன்னுடைய மாநகரம் படத்தில் நடிக்க இருந்த தொகுப்பாளருக்கு லோகேஷ் கொடுத்த வித்தியாச அட்வைஸ் தற்போது டிரெண்ட் ஆகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்களே ஆச்சரியமாகி இருக்கின்றனர்.

கோலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்களுக்கு தான் தற்போது காலம் போல தொடர்ந்து நல்ல வரவேற்பை அத்தகைய திரைப்படங்கள் வென்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரியோராஜ் நடிப்பில் வெளிவந்த ஜோ திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றுள்ளது.

இதையும் படிங்க… இது வேற வேறலெவல் வெறித்தனம்!.. வெளியானது கங்குவா பட புது போஸ்டர்!..

இப்படத்தில் நடித்த ரியோராஜ் சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் அவருக்கு விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி வாய்ப்பு கிடைத்தது. அதிலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க தன்னுடைய கேரியரை மொத்தமாக சினிமா பக்கம் திருப்பினார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படத்தில் நடித்தார். 

படம் பெரிய ரீச் இல்லை என்றாலும் அவருக்கு ஒரு அங்கீகாரத்தினை பெற்றது. அதை தொடர்ந்து அவர் நடித்த ப்ளான் பண்ணி பண்ணவும் பெரிய தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து அவர் நடித்து ஜோ ஹிட் படமாகி இருக்கிறது. இப்படத்தின் புரோமோஷனுக்கு ரியோ கொடுத்த பேட்டியில் ஆச்சரியமாக ஒரு விஷயத்தினை சொல்லி இருக்கிறார். 

அதாவது லோகேஷின் மாநகரம் படத்தின் ஆடிஷனில் தான் தேர்வாகி விட்டேன். ஆனால் எனக்கு அந்த வாய்ப்பு தரப்படவில்லை. நான் நேரடியாக சென்று லோகேஷிடம் கேட்டேன். அவர் மியூசிக் ஷோவை பார்க்கிறேன். இந்த கதாபாத்திரம் உங்களுக்கு மொக்கையா இருக்கும் வேண்டாம் என்றார்.

இதையும் படிங்க… விஜயகாந்துக்கு பிளாப் படங்கள் இவ்வளவு இருக்கா? எந்த ஊரில் இப்படி ஓடுச்சுன்னு தெரியுமா?