ஒத்த சொல்லுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த படக்குழு… கறார் காட்டிய மணிரத்னம்…

Published on: September 18, 2023
vairamuthu and manirathnam
---Advertisement---

Lyricist Vairamuthu: வைரமுத்து தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் ஒருவர். இவரின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் பல அர்த்தங்களை கொண்டிருக்கும். இவர் நிழல்கள் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராய் அறிமுகமானார். அப்படத்தில் இவர் எழுதிய இது ஒரு பொன்மாலை பொழுது பாடல் இவருக்கு பெரும் புகழை தேடி தந்தது.

இவர் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும் தமிழ் மீது அளவற்ற பற்று உடையவர். இவர் தமிழில் பல படங்களுக்கு பாடல்களை எழுதியும் கதைகளை எழுதியும் உள்ளார். இவர் பல புத்தகங்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் எழுதிய கருவாச்சி காவியம், தமிழாற்றுபடை போன்ற நூல்களில் இவரின் தமிழ் புலமையை நாம் காண முடியும். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான படம்தான் பம்பாய். இப்படத்தில் மனிஷா கொய்ராலா, அரவிந்த் சாமி போன்றோர் நடித்திருப்பர்.

இதையும் வாசிங்க:வளரவளர வெட்டி விட்ட கதையா இருக்கே!.. வைரமுத்துவால் வாழ்க்கையை தொலைத்த கங்கை அமரன்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. மேலும் இப்படத்தில் வரும் கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை பாடல் அக்கால இளைஞர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.

காதலை சொல்லாமல் தவிக்கும் காதலனும் காதலியும் அனுபவிக்கும் ஏக்கங்களை பாடல் வரிகளில் மிக அழகாக வைரமுத்து கொடுத்திருப்பார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இப்பாடலுக்கு கூடுதல் அழகூட்டும். இத்தகைய பாடலில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

இதையும் வாசிங்க:மூச்சு விடாமல் இருக்கும் தமிழ்நாடு… விஜய் மீது பாசத்தை பொழியும் வெளிநாடுகள்.. என்ன நடக்குகிறது?

கண்ணாளனே பாடல் எழுதி முடித்த பின் மணிரத்னம் அப்பாடலில் திருத்தம் செய்ய வேண்டும் என வைரமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது வைரமுத்து என் ஜீவனே, என் நாதனே, என் ஜீவனே போன்ற வார்த்தைகளை வைத்து ஆரம்பிக்கலாமா என கேட்டுள்ளார்.

அந்த வார்த்தைகள் அனைத்தும் இயல்பானதாக இருப்பதாக மணிரத்னம் கூறியுள்ளார். அதற்குபின் கண்ணதாசன் கண்ணாளனே என பாடல் வரிகளை திருத்தம் செய்துள்ளார். மணிரத்னமும் அதற்கு சம்மதம் கூறியுள்ளார். அதன்பின் வெளியான இப்பாடல் மிக பெரிய அளவில் வெற்றி பாடலாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க:தலைப்பே வேற லெவல்!.. ரசிகர்களுக்கு பர்த்டே ட்ரீட் கொடுத்த நயன்!.. வெளியான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!…