இத்தனை கோடி வசூலா?!. முதல் மலையாள திரைப்படம்!.. தமிழகத்தில் வசூலை அள்ளும் மஞ்சுமெல் பாய்ஸ்!..

by சிவா |
manjumel
X

தமிழ் திரையுலகில் அவ்வப்போது மற்ற மொழி திரைப்படங்களும் திடீரென எல்லோராலும் பேசப்பட்டு வசூலை அள்ளும். குறிப்பாக தெலுங்கு படங்கள் பல வருடங்களாக தமிழி மொழி மாற்றம் செய்யப்பட்டு வசூலை பெற்று வருகிறது. இது வைஜெயந்தி ஐபிஎஸ் படத்திலிருந்து தொடர்கிறது.

பல வருடங்களாகவே தெலுங்கு படங்கள் தமிழகத்தில் தமிழ் மொழியில் டப் செய்யப்பட்டு வருகிறது. அப்படி வெளியான பாகுபலி, பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர் ஆகிய படங்களும் தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றது. அதேபோல், கன்னட படங்களான கேஜிஎப், காந்தாரா, கேஜிஎப் 2 ஆகிய படங்களும் பல கோடி வசூலை பெற்றது.

இதையும் படிங்க: ‘மஞ்சுமெல் பாய்ஸ’ கொண்டாடுற நாம ஏன் இவரயும் கொண்டாடக் கூடாது? ரஜினி-கமலை மிஞ்சிய மம்மூட்டி

ஆனால், மலையாள படங்கள் பெரிதாக ஓடாது. சென்னை, கோவை போன்ற ஊர்களில் மட்டுமே அதுவும் மலையாள மொழியிலேயே வெளியாகும். அதுவும் சில தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும். ஆனால், சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்தில் வசூலை சக்கை போடு போட்டு வருகிறது. அதற்கு காரணம் கமல் நடித்து 1991ம் வருடம் வெளியான குணா திரைப்படம்தான்.

manjumel

குணா படத்தில் இடம் பெற்ற கொடைக்கானல் குகையை அடிப்படையாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். முதலில் அந்த இடம் Devil's kitchen என அழைக்கப்பட்டு வந்தது. ஏனெனில், அங்கு மிகவும் ஆபத்தான பகுதி ஆகும். ஆனால், கமலும், அப்பட இயக்குனர் சந்தானபாரதியும் மிகவும் சிரமப்பட்டு அந்த இடத்தில் படப்பிடிப்பை நடத்தினார்கள்.

இதையும் படிங்க: எப்படி போனேனோ அப்டியே திரும்பி வந்திருக்கேன்… மாஸ் லைன் அப்களால் திணறடிக்கும் சூர்யா!..

குணா படம் வெளியான பின் அந்த இடத்திற்கு குணா குகை என பெயர் வந்தது. தற்போது வெளியாகியுள்ள மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக மாறியிருக்கிறது. இப்படத்தை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், நடிகர்கள் விக்ரம், தனுஷ் ஆகியோரும் மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து பாராட்டி பேசியுள்ளனர்.

இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் தமிழகத்திலேயே 10 கோடியை தாண்டி வசூல் செய்திருக்கிறது. இந்த படம் இப்போது தமிழகத்தில் 850 தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்கிறது. கடந்த வார இறுதியில் இப்படம் பல திரையரங்கிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது. தமிழகத்தில் 10 கோடி வசூல் செய்த முதல் படமாக மஞ்சுமெல் பாய்ஸ் படம் சாதனை படைத்திருக்கிறது. ஒருபக்கம், உலகமெங்கும் இப்படம் 60 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எவ்வளவோ படம் கைவிட்டு போச்சு.. இந்த ரெண்டு படத்துல மட்டும் நடிச்சிருந்தா? மாஸை லாஸ் செய்த அஜித்

Next Story