கேரளாவில் விஜய் படம் ரிலீஸானால்…? மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்

by Akhilan |
கேரளாவில் விஜய் படம் ரிலீஸானால்…? மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்
X

Manjummel Boys: மலையாள சினிமா இந்த வருடம் தொடங்கியதில் இருந்து சக்ஸஸ் ரூட்டை பிடித்து உயர்ந்து கொண்டு இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் மஞ்சும்மெல் பாய்ஸ். இப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் தற்போது தமிழ்நாட்டில் தான் அதிகமாக இருக்கிறார். கோலிவுட்டுக்கு அத்தனை பரிச்சயமாகிவிட்டார்.

கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான குணா படம். அதில் இடம்பெற்ற குகையை வைத்து மலையாளத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற திரைப்படம் சமீபத்தில் ரிலீஸானது. படம் கேரளாவில் மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய ரீச்சை பெற்று இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் தொடர்ச்சியாக ஷோக்கள் ஓபன் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அப்பா ‘அன்பே சிவம்’ படம் ஓடாது!.. துள்ளிக் குதித்த இயக்குனர்!.. சுந்தர்.சி சொன்ன சோகக்கதை!..

இதற்கு காரணம், குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி பாடல் சரியான இடத்தில் சேர்க்கப்பட்டு இருந்தது. இதுவே தமிழ் ரசிகர்கள் கொண்டாட காரணமாகி இருக்கிறது. அதை தொடர்ந்து மஞ்சும்மெல் படத்தின் படக்குழுவை கமல்ஹாசன் சமீபத்தில் அழைத்து சந்தித்து இருந்தார். அவர்களுடன் இணைந்து படம் பார்த்த புகைப்படம் வெளியாகி வைரலானது.

இதை தொடர்ந்து உதயநிதி உள்ளிட்ட பல பிரபலங்கள் மஞ்சும்மெல் டீமை சந்தித்து இருந்தனர். இதனை தொடர்ந்து இயக்குனர் சிதம்பரம் நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார். அவ்வாறு அவர் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் விஜய் குறித்து பேசி இருக்கிறார். அதில், விஜயின் திரைப்படங்கள் கேரளாவில் ரிலீஸாகி விட்டால் எல்லா திரையரங்குகளும் புல்லாகி விடும்.

இதையும் படிங்க: ரஜினியின் கேரியர் அவ்வளவு தான்… ஒரே படத்தில் போராடி மீண்டெழுந்த சூப்பர்ஸ்டார்…

Next Story