‘மங்காத்தா’ வெங்கட் பிரபு கதையே இல்லை! விட்டுக் கொடுத்த பிரபலம்

Published on: September 17, 2024
mankatha
---Advertisement---

Mankatha Movie: அஜித்திற்கு ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்த திரைப்படம் மங்காத்தா. அது அவருடைய ஐம்பதாவது படமாகவும் ஒரு பெரிய பிளாக்பஸ்டர் படமாகவும் அமைந்தது. அந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க அஜித் திரிஷா அர்ஜுன் பிரேம்ஜி என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் நடித்திருந்தனர்.

வழக்கம்போல வெங்கட் பிரபுவின் கூட்டாளி நண்பர்களும் இந்த படத்தில் இணைந்திருந்தனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். யுவனின் இசை படத்தை இன்னும் வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றது. அந்த படத்தில் அஜித்திற்கு என வரும் பிஜிஎம் இப்போது வரை ரசிகர்களை ஒரு பெரிய ஹைப்பில் கொண்டு போய் நிறுத்தும் .

இதையும் படிங்க: கோட் படம் வசூல் குறைஞ்சதுக்கு இதுதான் காரணம்! இவர் சொன்னா சரியாத்தான் இருக்கும்

இந்த நிலையில் மங்காத்தா திரைப்படம் வெங்கட் பிரபு கதையே கிடையாது. என்னுடைய கதை என பிரபலம் கூறிய ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது .அவர் வேறு யாரும் இல்லை வெங்கட் பிரபுவின் தந்தையும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் தான். மங்காத்தா படத்தின் கதை கங்கை அமரனுடையதாம்.

இதை வெங்கட் பிரபுவிடம் கொடுத்து நீயே படமாக எடு. டைட்டிலில் உன் பெயரையே போட்டுக்கொள் என தன்னுடைய கதையை தன் மகனுக்கு கொடுத்திருக்கிறார் கங்கை அமரன். முதலில் அஜித் இல்லாமல் வேறொரு நடிகரை நடிக்க வைப்பதாக தான் இருந்ததாம். ஆனால் படத்தில் இரண்டு வில்லன்கள் என முதலிலேயே உறுதியாகிவிட்டாராம் கங்கை அமரன்.

இதையும் படிங்க: 10 டிவிடி பார்த்து படம் பண்ணார் அட்லீ.. சம்பளம் வாங்கிட்டு போயிட்டார் விஜய்!.. பொங்கிய பிரபலம்!..

அதைப்போல வெங்கட் பிரபுவும் அதை தான் நினைத்திருக்கிறார். அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் இந்த மாதிரி ஒரு கதை இருக்கிறது என்பதை அறிந்த அஜித் அந்தப் படத்தை நாம் பண்ணலாம் என அஜித்தே விரும்பி வந்தார் என கங்கை அமரன் கூறினார்.

அவர் சொன்னதைப் போல இந்தப் படத்தை பொறுத்த வரைக்கும் அஜித்தே வெங்கட் பிரபுவிடம் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நானே நடிக்கிறேன் என கூறி முன்வந்தார். அப்போது அஜித்திடம் வெங்கட் பிரபு இது முழுக்க முழுக்க ஒரு நெகட்டிவ் ஷேடில் அமைந்த திரைப்படம். உங்களுக்கு இது செட் ஆகுமா? என கேட்டபோது நெகட்டிவ் ஷேடில் நடிக்க எனக்கு விருப்பம் தான். துணிந்து பண்ணலாம் என சொல்லி அஜித் இந்த படத்தில் இறங்கியது தான் பெரிய பிளஸ்.

இதையும் படிங்க: எங்க சுத்தினாலும் வந்த இடம் சிறப்பு! ‘தளபதி 69’ டிராவல் கதை தெரியுமா?

அதுவரை ஒரு லவ்வர் பாயாக ஹேண்ட்ஸம்மான ஹீரோவாகவே பார்த்து வந்த ரசிகர்களுக்கு முதன் முறையாக இந்த படத்தில் அஜித்தை வில்லனாக அதுவும் ஒரு மாஸ் வில்லனாக பார்த்தபோது ஹீரோவாக ரசித்ததை விட வில்லனாக இன்னும் அதிகம் பேர் ரசிக்க தொடங்கினார்கள் என்பதுதான் உண்மை.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.