மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..

by Saranya M |
மன்சூர் அலி கானுக்கு என்ன ஆச்சு?.. ஐசியூவில் அட்மிட் ஆகிட்டாராம்.. தேர்தல் நேரத்தில் இப்படியா?..
X

சரக்கு படத்தில் கடைசியாக ஹீரோவாக நடித்த மன்சூர் அலி கான் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான மயக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் மன்சூர் அலி கான் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் லியோவின் பிளாஷ்பேக் காட்சியை சொல்லும் இருதயராஜ் டிசோசா கதாபாத்திரத்தில் மன்சூர் அலி கான் நடித்து மிரட்டி இருப்பார்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் ஈகோவை டச் பண்ணிய நடிகை!.. கோபத்தில் என்ன செய்தார் தெரியுமா?…

அந்த படம் வெளியான பின்னர், திரிஷா குறித்து மன்சூர் அலி கான் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முன்பெல்லாம் குஷ்பூ, ரோஜா, ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளுடன் ரேப் சீன்கள் இருக்கும். ஆனால், திரிஷாவுடன் அப்படி ஒரு சீன் கூட லோகேஷ் கனகராஜ் தனக்கு கொடுக்கவில்லை என அவர் பேசியது கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

நடிகை திரிஷா கொந்தளித்து ட்வீட் போட்ட நிலையில் லோகேஷ் கனகராஜ், குஷ்பூ, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலர் மன்சூர் அலி கான் எதிராக கண்டனம் தெரிவித்தனர். மன்சூர் அலி கான் நடித்த சரக்கு படத்தின் பிரமோஷனுக்காக இப்படி எல்லாம் பேசிய அவர், அந்த படம் வெளியாகி படுத்து தோல்வியை சந்தித்த நிலையில் அமைதியாகிவிட்டார்.

இதையும் படிங்க: பட்டனை கழட்டி பசங்களை பாடாய் படுத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்!.. இது செம பிக்ஸ்!..

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை ஆரம்பித்து நடத்தி வரும் மன்சூர் அலி கான் தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்ட பலாப்பழம் சின்னத்தை வைத்து வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.

திடீரென அவர் மயக்கம் போட்டு விழுந்த நிலையில், உடனடியாக அவரது கட்சியினர் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். தற்போது அவருக்கு ஐ சியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மன்சூர் அலி கான் பூரண நலம் பெற்று வர வேண்டும் என அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ராயன் படம் இப்படத்தின் காப்பியா? வில்லனாக களமிறங்கும் லேட்டஸ்ட் சென்ஷேசன்…

Next Story