பெண் நிரூபர் கேட்ட கேள்வி! உடனே பாத்ரூம் கூட்டிட்டு போய் காட்டிய மன்சூர் அலிகான் – என்னத்த சொல்றது?

Published on: August 14, 2023
mansoor
---Advertisement---

தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான பாடி லேங்குவேஜால் அனைவரையும் மிரள வைத்தவர் நடிகர்  மன்சூர் அலிகான். கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான மன்சூர் அலிகான் முதல் படத்திலேயே திணற வைத்தார்.

முகம் முழுவதும் இரத்தக்கறையை காட்டி யாருப்பா இந்த நடிகர் என்று கேட்கும் அளவுக்கு அறிமுகத்திலேயே அசரவைத்தார். பல முன்னனி நடிகர்களுடன் சேர்ந்து வில்லனாக கலக்கிய மன்சூர் அலிகான் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.

இதையும் படிங்க : ஸ்ரீதேவி அக்கா இன்னும் இறக்கல… இங்கதான் இருக்காங்க… அஜித் படத்தின் ஹிட் நாயகில இவங்க…

இடையிலேயே பட வாய்ப்புகள் குறையத் தொடங்க கொஞ்ச நாள் சினிமா பக்கமே ஆளே காணாமல் போயிருந்தார். சினிமாவையும் தாண்டி சமூக நலனில் அக்கறை கொண்டவராகவே இருந்து வருகிறார்.  பல போராட்டங்களை செய்து அவ்வப்போது சிறைச்சாலைக்கும் சென்றிருக்கிறாராம்.

இந்த நிலையில் நேற்று ஒரு தனியார் யூடியூப் சேனலில் இருந்து பெண் நிரூபர் பேட்டி காண்பதற்காக மன்சூர் அலிகான் வீட்டிற்கு சென்றிருந்தார். எப்படி இருக்கீங்க சார் என நிரூபர் கேட்க உடனே மன்சூர் அலிகான் அந்தப் பக்கமாக தலையை திருப்பி கொண்டார்.

ஆரம்பமே பயங்கரமாக இருக்கே என  முணுமுணுத்துக் கொண்டே மீண்டும் எப்படி இருக்கீங்க சார் என அந்த நிரூபர் கேட்டார். அதற்கு மன்சூர் அலிகான் நாடு நல்லா இல்லையே, என் நாட்டு மக்கள் நல்லா இல்லையே என  மிகவும் சலித்துக் கொண்டே பதில் கூறினார்.

இதையும் படிங்க : ரஜினி அவங்க மேலலாம் காண்டு.. அதுக்குதான் இந்த வசூல் வடை.. கம்பு சுத்தும் புளூசட்டமாறன்..

அதன் பிறகு நிரூபர் எத்தனை நாளாக இந்த வீட்டில் இருக்கீங்க ? என கேட்க அதற்கோ இது நாட்டுக்கு ரொம்ப தேவையா? அவன் அவன் வீடு இல்லாமல் அலைஞ்சுக்கிட்டு இருக்கானு அவர் எதார்த்தமாக பேசினார். மேலும் மன்சூர் அலிகான் மரங்களின் மீது மிகவும் பாசம் கொண்டவராம்.

வீட்டிற்குள்ளாகவே 6 மரங்களை வைத்திருக்கிறார். அதை பற்றி கேட்ட நிரூபருக்கு உடனே பாத்ரூம் அறையை திறந்து காண்பித்து உள்ளே இருக்கிற பெரிய பனைமரத்தை காட்டினார். அதை பார்த்ததும் நிரூபர் அசந்து போய்விட சமையலறையில் இரண்டு  மரங்களை வைத்திருக்கிறாராம்.

மரங்களை வெட்டுவது என்பது  மன்சூர் அலிகானுக்கு பிடிக்காதாம். அதன் காரணமாகவே வீட்டில் 6 மரங்களை வளர்த்து அதனுடனேயே இருந்து வருகிறேன் என்று கூறினார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.