Connect with us
sridevi

Cinema News

ஸ்ரீதேவி அக்கா இன்னும் இறக்கல… இங்கதான் இருக்காங்க… அஜித் படத்தின் ஹிட் நாயகில இவங்க…

பாலிவுட்டின் பிரபல நடிகையான ஸ்ரீதேவி தமிழிலும் தனக்கென தனி முத்திரையை பதித்து இருந்தார். பல வெற்றி படங்களை கொடுத்தவர். பாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு சற்று ப்ரேக் கொடுத்தார். பின்னர் பல வருட இடைவேளைக்கு பிறகு இங்கிலிஷ் விங்கிலிஷ் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து தான் எப்போதுமே கெத்து தான் என்பதையுமே நிரூபித்தார்.

தமிழிலில் புலி, பாலிவுட்டில் மாம் படங்கள் என பிஸியாக நடித்து கொண்டிருந்தவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றார். அங்கு திடீரென குளியல் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த செய்தி பல மொழி பிரபலங்களுக்கும் மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்தது. அவர் இறப்பில் பல அதிர்ச்சி தகவல்கள் கூறப்பட்டாலும் அதில் இன்னமும் சரியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: பெண் நிரூபர் கேட்ட கேள்வி! உடனே பாத்ரூம் கூட்டிட்டு போய் காட்டிய மன்சூர் அலிகான் – என்னத்த சொல்றது?

இதுகுறித்து பேட்டியில் பேசிய ஸ்ரீதேவி, சின்ன வயசில் இருந்து நான், அக்கா மற்றும் தம்பி என்று தான் இருப்போம். அக்காவிற்கு ஷூட்டிங் இல்லாத நாளில் எங்களுக்கும் பள்ளிக்கு விடுமுறை கிடைத்து விடும். ஜாலியாக என்ஜாய் செய்வோம். பப்பக்கா என்று தான் அவரை கூப்பிடுவோம். எப்போதும் அவர் எங்களுடன் தான் நேரம் செலவழிப்பார்.

இதையும் படிங்க: ரஜினி அவங்க மேலலாம் காண்டு.. அதுக்குதான் இந்த வசூல் வடை.. கம்பு சுத்தும் புளூசட்டமாறன்..

அவர் இறந்து விட்டார் என இன்னும் எங்களால் நம்பமுடியவில்லை. அவர் இன்னும் வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதாகவே நம்புகிறோம் என்றார். ஆனால் மகேஸ்வரியும் ஸ்ரீதேவி இறந்த காரணம் குறித்து எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிலில் உல்லாசம், நாம் இருவர் நமக்கு இருவர், கருத்தம்மா போன்ற படங்களில் நடித்தவர் மகேஸ்வரி. இவருக்கு உல்லாசம் மட்டுமே சற்று நல்ல வரவேற்பை கொடுத்தது. மற்ற வாய்ப்புகளும் வரவில்லை என்பதால் படத்தில் நடிப்பதில் இருந்து விலகி விட்டார். இவர் நடிகை ஸ்ரீதேவியின் சித்தி மகள் என்பது கூடுதல் தகவல்.

google news
Continue Reading

More in Cinema News

To Top