ரெடியாகிறதா மதராசப்பட்டினம் 2? ஆர்யாவுக்கு பதில் இவர்தான் ஹீரோவா? வைரலாகும் புகைப்படம்

by Rohini |   ( Updated:2024-02-01 01:29:21  )
ari
X

ari

Matharasapattinam: ஹாலிவுட்டுக்கு எப்படி டைட்டானிக் படம் அமைந்ததோ அதே போல் கோலிவுட்டுக்கு அமைந்த திரைப்படம் மதராசப்பட்டினம். காதலில் ஆழத்தை அழகாக காட்டிய படமாக மதராசப்பட்டினம் திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தின் மூலம்தான் ஏம் ஜாக்‌ஷன் முதன் முதலில் தமிழில் அறிமுகமானார்.

ஒரு ஆங்கிலேய பெண்ணாக மதராசப்பட்டினம் படத்தில் ஏமி ஜாக்‌ஷன் நடிக்க அவரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதுவும் தலையில் தொப்பி, கைகளில் க்ளவுஸ் என பார்க்க பார்க்க தூண்டும் அழகில் மிக அழகாக இருப்பார்.

இதையும் படிங்க: அட மீண்டும் மீண்டுமா? அஜித்தின் அடுத்த படத்தினை இயக்க போவது இந்த இயக்குனரா?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படத்தில் கூடுதல் பலம் என்னவென்றால் படத்தில் அமைந்த பாடல்கள். ஜிவி பிரகாஷ் மியூஸிக்கில் அமைந்த அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்.இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு ஏமி ஜாக்சன் ஒரு சில படங்களில் நடித்து லண்டனில் செட்டிலானார். அதன் பிறகு சமீபத்தில் ரிலீஸான மிஷன் படத்திற்காக சென்னை வந்தார். அந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் எமி ஜாக்‌ஷன்.

madhan

madhan

இதையும் படிங்க:டிரெஸ் மொத்தமே 50 கிராம்தான் தேறும்!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் ஆண்ட்ரியா…

இந்த நிலையில் மிஷன் பட ப்ரோமோஷனுக்கு படக்குழு அவ்வப்போது பேட்டிக் கொடுத்து வந்த நிலையில் திடீரென ஒரு புகைப்படம் வைரலானது. அதாவது எமி ஜாக்சனுடன் பிரபல யுடியூப்பர் மதன் கௌரி கட்டிபிடித்து அன்பை பரிமாறுவது போல ஒரு புகைப்படம் வைரலானது.

உடனே இதை பார்த்த ரசிகர்கள் மதராசப்பட்டினம் 2 ரெடியாக போகிறதா? என கேட்டு கமெண்ட் அடித்தனர். இதை பற்றி சித்ரா லட்சுமணனிடம் கேட்ட போது இன்னும் அதை பற்றி சரிவர செய்திகள் வெளிவரவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

Next Story