Cinema News
நான் அழகா இருக்கேன்னு சொல்ல மாட்டீங்களா?.. ஒளிப்பதிவாளருக்கு ரூட் விட்ட ரன் நடிகை?..
திரையுலகில் சம்பந்தமான அத்தனை துறைகளையும் ஒருங்கிணைத்து காட்சிகளாக கோர்த்து ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப தரமான முறையில் வழங்குவது திரைப்படம். இந்த திரைப்படத்தை படமாக்க இயக்குனர் எப்படி முக்கியமோ அதே அளவுக்கு எடுக்கக் கூடிய காட்சிகளை ஒழுங்கான படச்சுருளை பயன்படுத்தி படம் பிடித்து காட்டும் ஒளிப்பதிவாளர்களும் மிக மிக முக்கியம்.
தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் மிகப் பிரபலமான ஒளிப்பதிவாளர்கள் தங்கள் அனுபவங்களை இப்பொழுது உள்ள இளம் தலைமுறையினருக்கு கொடுத்திருக்கின்றனர். பிசி.ஸ்ரீராம், ரவி வர்மன், கே.வி.ஆனந்த் போன்ற பல கலைஞர்கள் வரக்கூடிய பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரும் உதவியாக இருக்கின்றனர்.
80களின் காலகட்டத்தில் தலையாய ஒளிப்பதிவாளராக இருந்தவர் பாலு மகேந்திரா. காட்சிகளை பார்க்கும் போது நாமும் அந்தக் காட்சியுடனேயே ஒன்றி விடுவோம். மேலும் இந்த ஒளிப்பதிவாளர்களுக்கு தான் தெரியும் ஹீரோ , ஹீரோயினை எப்படி அழகாக காட்டவேண்டும் என்று.
அந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமான ஒளிப்பதிவாளராக இருப்பவர் ஆர்தர் வில்சன். சுந்தர புருஷன் என்ற படத்தின் மூலம் தன் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் சமீபத்தில் வெளியான இரவின் நிழல் படம் வரை தொடர்ந்து பணியாற்றி முன்னனி ஒளிப்பதிவாளராக இருக்கிறார்.
இவருடைய குணாதிசயங்களில் ஒன்று எந்த பிரபலங்களிடமும் அதிக நெருக்கம் காட்டமாட்டாராம். கமல் முதல் அஜித், விஜய் என முன்னனி நடிகர்களுடன் நட்புறவு கொண்டிருக்கிறார். ஆனால் அடிக்கடி தொலைபேசியில் பேசி நெருக்கம் காட்டுவதை விரும்பமாட்டாராம். அதே போல ஹீரோயின்களிடமும் அதிகமாக பேசமாட்டாராம்.
அந்த வகையில் ஆர்தர் வில்சன் ரன் படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது அந்தப் படத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் வில்சனுடன் நட்புறவு கொண்டிருக்கிறார். மேலும் அவரிடம் ‘ நான் அழகாக இருக்கிறேனா’ என்று கேட்டாராம் மீரா ஜாஸ்மின். அதற்கு ஆர்தர் வில்சன் ஆம் என்று சொல்ல அப்புறம் ஏன் நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்ல மாட்டிக்கிங்க என்று கேட்டாராம்.
இதையும் படிங்க : கமலுக்கு நிகர் இந்த காமெடி நடிகரா?.. புதுசாத்தான் யோசிக்கிறாங்கேய்யா!..
இதைப் பற்றி ஒரு பேட்டியில் ஆர்தர் வில்சன் கூறும் போது நானா போய் எப்படி அந்த மாதிரி சொல்ல முடியும்? ஆனால் மீரா அழகான நன்றாக குணம் படைத்த பெண் என்று பெருமையாக கூறினார் ஆர்தூர் வில்சன்.