விஜய் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே சூப்பர்ஸ்டாராக இருந்தவர் ரஜினி. ஆனால், கடந்த சில வருடங்களாக விஜய் ரஜினியை நெருங்கிவிட்டார்.. சம்பளத்தில் ரஜினியை தாண்டிவிட்டார்.. அடுத்த சூப்பர்ஸ்டார் இவர்தான் என விஜயின் அபிமானிகளும் அவரின் ரசிகர்களும் பேச துவங்கிவிட்டனர்.
சில தயாரிப்பாளர்களும் விஜயின் மனதில் இடம்பிடிப்பதற்காக அவர் நடிக்கும் படங்களை ஹைப் செய்து சமூகவலைத்தளங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர். ஆனால், ஜெயிலர் படம் மூலம் எப்போதும் நான்தான் சூப்பர்ஸ்டார் என ரஜினி காட்டிவிட்டார். ஜெயிலர் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் என சொல்கிறார்கள். தியேட்டர் மூலம் மட்டுமே ரூ.600 கோடியை இப்படம் தாண்டிவிட்டதால் ஓடிடி, சேட்டிலைட்,ஆடியோ, மற்ற மொழி உரிமைகள் என எல்லாவற்றையும் சேர்த்தால் இப்படத்தின் வியாபாரம் ரூ.1000 கோடியை தொடும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: லியோ படம் ப்ளாப் ஆகணும்.. இல்ல விஜயிக்கு தான் கஷ்டம்… என்னங்க தலைகீழா சொல்றீங்க!
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் மீசை ராஜேந்திரன் ‘ஜெயிலர் பட வசூலை லியோ படம் முறியடிக்க முடியாது. சமூக ஊடகங்கள் தொடர்ந்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜயை ஹைப் பண்ண ஒரு குழுவே சமூகவலைத்தளங்களில் வேலை செய்கிறது. குணத்திலும் சரி, வசூலிலும் சரி.. ரஜினியோடு விஜயை ஒப்பிடவே முடியாது. சக நடிகர்களை ரஜினி மதிப்பார். முக்கியத்துவம் கொடுப்பார். இது விஜயிடம் பார்க்கவே முடியாது. அவருடன் 7 படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு அது தெரியும்’.
விஜயின் சம்பளத்தை அவரே உயர்த்திகொண்டார். புலி படத்தில்தான் அவருக்கு ரூ.70 கோடி சம்பளம் உயர்த்தப்பட்டது. அந்த படத்தை தயாரித்தது அவரின் மேனேஜர் பி.டி.செல்வகுமார். அதாவது விஜயின் பணத்தில் அந்த படம் உருவானது. அவரே இதுதான் சம்பளம் என போட்டுக்கொண்டார். அவரின் உறவினர்கள் இரண்டு பேர் இணைந்து மாஸ்டர் படத்தை தயாரித்தனர். அதுவும் விஜயின் பணம்தான். அந்த படத்திற்கு ரூ.80 கோடி என போட்டுகொண்டார்.
இதையும் படிங்க: 4 மணிக்கு ஆசைப்பட்டு நாசமா போச்சா!.. லியோ படத்துக்கு இப்போ எத்தனை மணி ஷோ தெரியுமா?
ஆனால், ரஜினி அப்படி அல்ல. எல்லாமே அவரை தேடி வந்தது. அண்ணாத்த படத்தில் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கிய ரஜினி அந்த படம் சரியாக போகவில்லை என்பதால் அதே சன்பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஜெயிலர் படத்தில் ரூ.80 கோடி சம்பளம் வாங்கி நடித்து கொடுத்தார். இந்த குணம் விஜய்க்கு வராது.
ரஜினியின் ஜெயிலர் மற்றும் 2.0 வசூலை லியோ தாண்டாது. இதுதான் வசூல் என உண்மையான தகவலை தயாரிப்பாளர் சொல்லட்டும். அது ஜெயிலர்,2.0 பட வசூலை விட அதிகமாக இருந்தால் நான் மீசையை எடுத்துக்கொள்கிறேன்’ என ராஜேந்திரன் ஆவேசமாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: ரஜினிக்கு வெண்ணெய்!.. விஜய்க்கு மட்டும் சுண்ணாம்பா.. கத்தரி போடும் சென்சார்.. லியோ தலை தப்புமா?..
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…