Cinema News
மெட்டி ஒலி தனமா இவங்க.. என்னங்க இப்படி ஆகிட்டீங்க..! 10 வருஷம் கழிச்சு வெளிவந்த உண்மை..!
Metti oli dhanam: தமிழ் சீரியல் வரலாற்றில் ஆண்களை கூட பார்க்க வைத்த முதல் சீரியல் என்ற பெருமை மெட்டி ஒலிக்கு தான் சேரும். பல வருடங்கள் கடந்தாலும் அந்த சீரியலின் எண்ட்ரி பாடலுக்கே ரசிகர்கள் அதிகம். ஐந்து பெண்களுக்கும் அப்பாவுக்குமான கதையாக தான் அந்த சீரியல் ஹிட் அடித்தது.
இதில் முதல் பெண்ணாக நடித்தவர் நடிகை காவேரி. தமிழ் சினிமாவில் வைகாசி பொறாந்தாச்சு படத்தின் மூலம் நடிப்புக்குள் வந்தார். ஆனால் இவருக்கென அடையாளத்தினை கொடுத்தது மெட்டி ஒலி சீரியல் தான். தொடர்ந்து ரம்யா கிருஷ்ணனின் வம்சம் சீரியலில் நடித்து வந்தார்.
இதையும் படிங்க: அடுத்த பிரச்னை ஆன் தி வே போல.. கோபிக்கு வாய் அடங்குனா தான் ஆச்சரியம்..!
ஆனால் அதன் பின்னர் காவேரியை பொதுவெளியில் காணவில்லை. கிட்டத்தட்ட 10 வருடம் கழித்து உடல்மெலிந்து அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். தற்போது அவர் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து சில அதிர்ச்சி தகவலையும் கூறி இருக்கிறார்.
அதில், வம்சம் நடிச்சு முடிச்ச கையோடு அம்மா இறந்துட்டாங்க. அந்த டைமில் தான் எனக்கு கல்யாணம் ஆகி இருந்தது. இதனால் எனக்கு டிரஸன் வந்துட்டு அதனால் வீட்டுக்குள்ளே முடங்கிட்டேன். நிறைய ஊரில் வாழ்ந்து வந்தோம். ஒரு வேலைக்காக ஒரு வாரத்துக்கு தான் சென்னை வந்தோம்.
ஆனால் என்னுடைய அண்ணன் இறந்துவிட்டார். அதனால் சில விஷயங்களும் நடந்து விட்டது. கிட்டத்தட்ட ஒன்னரை வருடங்கள் இங்கே இருக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. விரைவில் கிளம்பிவிடுவோம். எனக்கு தைராய்டு வந்துவிட்டது. அதனால் மாத்திரை சாப்பிட்டு வந்தேன். நிறைய வெயிட் போட்டேன். அதனால் மாத்திரையை ஒருகட்டத்தில் டக்குனு நிறுத்தினேன்.
இதையும் படிங்க: வில்லனை வீட்டுக்குள்ள களமிறக்குறீங்க போல… ஸ்ருதி காமெடி பீஸ் ஆகாம இருந்தா சரி… விஜயா ஆட்டம் ஆரம்பமாகுமா?
உடனே 8 கிலோ வரை குறைந்துவிட்டது. வெயிட் போடனும். ஆனால் எது செய்தாலும் ஏறவே மாட்டிங்குது. சமுத்திரகனி, விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, ரேவதி, நயன் படங்களில் நடிக்க வேண்டும் எனக்கு ஆசை. என்னுடன் நடித்து இருந்த விஜி இறந்த விஷயம் கூட எனக்கு இரண்டு நாட்கள் கழிச்சு தான் தெரிந்தது. நான் யாருடனும் பேசவில்லை. இந்த 10 வருடமும் வீட்டுக்குள் தான் இருந்தேன்.
எனக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. மெட்டி ஒலி சமயத்தில் அப்பா இறப்பு சீனுக்கு சண்டையே நடந்தது. எனக்கும், காயத்ரிக்கும் அந்த சமயத்தில் தான் அப்பாவுக்கு இறந்ததால் இயக்குனரிடம் வேண்டாம் என்றோம். கடைசியில் அவர் புரிய வைத்தார். மெட்டி ஒலி இரண்டாம் பாகம் குறித்து எனக்கு இதுவரை எந்த தகவலும் சொல்லப்படவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: ரேஸில் ஜெயிப்பாரா நயன்? நாளை இத்தனை படங்களுடன் மோதும் லேடி சூப்பர் ஸ்டார் – களைகட்டும் திரையரங்கம்