என்னது எம்ஜிஆர் வில்லனா? அதுவும் அந்த ஸ்மார்ட் ஹீரோவுக்கா?
எம்ஜிஆர் என்றாலே நமக்கு எப்போதும் அழகான ஸ்டைலான ஹீரோவாகத் தான் தெரியும். அவர் வில்லனாக நடித்துப் பார்த்திருக்கவே முடியாது. அவர் அப்படியே நடித்தாலும் டபுள் ஆக்ட் படங்களில் அவருக்கு அவரே வில்லனாகத் தான் நடித்து அசத்தி இருப்பார். அந்த வகையில் இது புதுசு. வேறொரு நடிகருக்கு வில்லனாக எம்ஜிஆர் நடித்து உள்ளார். வாங்க அது என்ன படம்னு பார்க்கலாம். மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற பல வெற்றிப்படங்கள்ல நடித்த ரஞ்சனைப் பொருத்தவரைக்கும், அவருக்குத் தெரியாத கலைகளே இல்லை […]

எம்ஜிஆர் என்றாலே நமக்கு எப்போதும் அழகான ஸ்டைலான ஹீரோவாகத் தான் தெரியும். அவர் வில்லனாக நடித்துப் பார்த்திருக்கவே முடியாது. அவர் அப்படியே நடித்தாலும் டபுள் ஆக்ட் படங்களில் அவருக்கு அவரே வில்லனாகத் தான் நடித்து அசத்தி இருப்பார். அந்த வகையில் இது புதுசு. வேறொரு நடிகருக்கு வில்லனாக எம்ஜிஆர் நடித்து உள்ளார். வாங்க அது என்ன படம்னு பார்க்கலாம்.
மங்கம்மா சபதம், சந்திரலேகா போன்ற பல வெற்றிப்படங்கள்ல நடித்த ரஞ்சனைப் பொருத்தவரைக்கும், அவருக்குத் தெரியாத கலைகளே இல்லை என்று சொல்லலாம். அந்தளவுக்கு சகலகலாவல்லவனாக திகழ்ந்த ஒரு நடிகர் தான் ரஞ்சன். 1943ம் ஆண்டில் வெளியான மங்கம்மா சபதம் படத்தில் வைஜெயந்திமாலாவின் தாயான வசுந்தராதேவியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் ரஞ்சன். 1945ல் வெளியான சாலிவாஹனன் படத்தில் டிஆர்.ராஜகுமாரியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார்.
அந்தப் படத்தில் அவருக்கு வில்லனாக நடித்தது மக்கள் திலகம் எம்ஜிஆர். ரஞ்சனுடைய முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்த படமாக ஜெமினி பிக்சர்ஸின் சந்திரலேகா அமைந்தது. அந்த வாள்வீச்சுத் திறன் காரணமாக எம்ஜிஆருக்குப் போட்டியாக அமையக்கூடிய ஒரே கலைஞர் ரஞ்சன் தான் என்று கூட அந்தக் காலகட்டத்தில் பல விமர்சகர்கள் எழுதினார்கள். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடந்தது என்பது நாம் அறிந்த விஷயம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.












