எம்ஜிஆரின் மறைவு செய்தி கேட்டு சிவாஜி ரியாக்ஷன்… அட எவ்ளோ பாசம்னு பாருங்க..!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படங்கள், எம்ஜிஆருடைய படங்களுக்குப் போட்டியாக இருக்கும். இது எல்லாமே ரசிகர்களுக்கு விருந்து தான். அந்தளவுக்கு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் ஸ்டைல் கிங்னா, சிவாஜி நடிப்புல கிங். இருவரது ரசிகர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் எழுவதுண்டு. படங்கள் ரிலீஸ் ஆனால் போட்டி போட்டுக் கொண்டு வசனங்கள் எழுதி கொண்டாடுவர். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜியின் நட்பு உண்மையில் எப்படி இருந்தது? இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அப்போதே இருவருடைய […]

sivaji, mgr

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் படங்கள், எம்ஜிஆருடைய படங்களுக்குப் போட்டியாக இருக்கும். இது எல்லாமே ரசிகர்களுக்கு விருந்து தான். அந்தளவுக்கு ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு நடித்திருப்பார்கள். எம்ஜிஆர் ஸ்டைல் கிங்னா, சிவாஜி நடிப்புல கிங். இருவரது ரசிகர்களுக்கும் அடிக்கடி விவாதங்கள் எழுவதுண்டு. படங்கள் ரிலீஸ் ஆனால் போட்டி போட்டுக் கொண்டு வசனங்கள் எழுதி கொண்டாடுவர். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜியின் நட்பு உண்மையில் எப்படி இருந்தது?

இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் கூண்டுக்கிளி. அப்போதே இருவருடைய ரசிகர்களுக்குள்ளும் மோதல்கள் வந்துவிடக் கூடாது என இருவரும் முடிவெடுத்தனர். அதனால் அதன்பின் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை. ஆனால் பாசத்தில் இருவரும் எப்படி இருந்துருக்காங்கன்னு பாருங்க. எம்ஜிஆரின் மறைவு செய்தி கேட்ட சிவாஜிக்கு அப்படி ஒரு மனசங்கடமாம். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

எம்ஜிஆர் இறந்த போது சிவாஜியின் மனநிலை எப்படி இருந்ததுன்னு தெரியுமா? இதை ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் இப்படி பதில் சொல்கிறார். எம்ஜிஆர் இறந்த செய்தியைக் கேள்விப்பட்ட உடனே, சிவாஜி தாங்கொண்ணாத துயரத்திற்கு ஆளானார். எம்ஜிஆர் மறைவு குறித்து ஊடகங்களிடம் பேசியபோது தமிழ்த்திரை உலகிலும் சரி.

என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி. எனக்கு ஒரு கை முறிந்து போனதாகவே நான் உணர்கிறேன். எனக்கு பெருமை சேர்த்த என்னை வழிநடத்திய என் அண்ணனை இழந்து விட்டேன் என்று தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தி இருந்தார் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். அவர்கள் இரண்டு பேரை பொருத்தவரைக்கும் திரையுலகில் போட்டியாளர்களாக இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் அந்தளவுக்குப் பாசம் வைத்து இருந்தனர்.

CR
ஆசிரியர்

sankaran v

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →