Cinema History
அந்த பாட்டை கண்ணதாசன் தான் எழுத வேண்டும்… அடம் பிடித்த எம்ஜிஆர்.. அதிர்ந்த படக்குழு…
Kannadasan MGR: இப்போது இருப்பதை விட 60களில் தொடங்கி 70வது வரை சினிமாவில் இருந்த ஜாம்பவான்களிடம் பிரச்னை என்பதே பெரிய விஷயமாக இருக்கும். அப்படி தான் எம்ஜிஆர் மற்றும் கண்ணதாசன் இருவருக்குமான நட்பு. அடிக்கடி இருவருக்கும் சண்டைகள் வந்துக்கொண்டே இருக்குமாம்.
என்னத்தான் சண்டை போட்டால் கூட இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் நட்புடன் இருந்தனர். அப்படி ஒரு நாள் சங்கே முழங்கு என்ற படத்திற்கு குறிப்பிட்ட பாடலை எழுத கண்ணதாசன் தான் வேண்டும் என விடாப்பிடியாக எம்.ஜி.ஆர் சொல்லி சென்றுவிட்டார். ஆனால் படக்குழுவுக்கோ இது என்னப்பா புது பிரச்னை. நம்ம போய் எப்படி கேட்பது என தயங்கினார்களாம்.
இதையும் படிங்க: கூட நடிச்ச ஆளுசார் நான்.. காசு பணமா கேட்க போறேன்! விஜயை பார்க்க சென்ற இடத்தில் அவமானப்பட்ட நடிகர்
ஆனால் என்ன செய்வது எம்.ஜி.ஆர் சொல்லிட்டாரே. கேட்டு தான் ஆகணும் என முடிவு எடுக்கப்பட்டது. அந்த காலத்தில் முழு போதையில் இருப்பவர் கண்ணதாசன். ஆனால் படக்குழுவுக்கோ குடியின் தீமைகளை எடுத்து கூறும் பாட்டு எழுத ஆள் வேண்டும். இதுக்கு தான் இவ்வளவு போராட்டம்.
படக்குழுவும் யோசித்து கொண்டே விஷயத்தினை போய் கண்ணதாசனிடம் கூறுகின்றனர். அவருக்கும் ஒரு அதிர்ச்சி தானாம். குடியில் இருக்கும் என்னிடம் போய் தீமையை எடுத்து கூற பாடல் கேட்டு இருக்காரே என குழம்பி போய் விட்டாராம். மதுக்குள் இருக்கும் தன்னை விட அதன் பிரச்னையை யாரால் சொல்லிட முடியும்.
இதையும் படிங்க: தன் மகளை அந்த நடிகை போல ஆக்கனும்னு ஆசைப்பட்ட வனிதா! கடைசில என்னாச்சு தெரியுமா?
அதனால் தான் எம்.ஜி.ஆர் என்னை எழுத சொல்கிறார் என தெளிந்து கொண்ட கண்ணதாசன் போய் பாடலை எழுதி கொடுத்தாராம். அந்த பாடல் வரிகள்,
மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது
நல்லவனும் தீயவனே
கோப்பை ஏந்தும் போது.
இந்த வரிகளை கேட்டு எம்.ஜி.ஆருக்கே பரவசமாகி விட்டதாம். அப்போது படக்குழுவை பார்த்தவர். இப்போ தெரிகிறதா இந்த பாட்டுக்கு நான் ஏன் கண்ணதாசனை தேர்ந்தெடுத்தேன் என்பது எனக் கேட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அப்போது, எதை எப்படி யாரிடம் கேட்டு வாங்க வேண்டும் என்ற வித்தை எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரிந்திருந்தது
இதையும் படிங்க: வேட்டையன் படத்தின் தற்போதைய நிலை என்ன? வெளியான சூப்பர் அப்டேட்… ரிலீஸ் எப்போ தெரியுமா?