ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…

Published on: November 4, 2023
kannadhasan mgr
---Advertisement---

கண்ணதாசன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடலாசிரியர்களில் ஒருவர். இவர் தமிழில் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்கள் மிகவும் உயிரோட்டம் நிறைந்ததாக இருக்கும். இவர் ஒரு காலத்தில் அனைத்து இயக்குனர்களாலும் விரும்பப்பட்ட ஒரு கவிஞர்.

இவர் பாடலாசிரியர் மட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளரும் கூட. மாலையிட்ட மங்கை, சிவகங்கை சீமை போன்ற பல திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். தனது பெயரிலேயே ஒரு  தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது இவர் தனது முதல் படத்தினை தயாரிக்கும் எண்ணத்தில் இருந்துள்ளார். அப்போது இவரின் நண்பரான சிங்காரதேவர் எம்ஜிஆரை வைத்து படம் பண்ணுமாறு கூறுகிறார். கண்ணதாசனும் எம்ஜிஆரிடம் போய் கேட்க அவரும் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். மேலும் 3 மாதங்கள் கால்ஷீட்டும் கொடுத்துள்ளார்.

இதையும் வாசிங்க:கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..

பின் கண்ணதாசனுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட அவருக்கான கதையையும் தயார் செய்துகொண்டிருந்தார். எம்ஆரும் கண்ணதாசனும் நிஜ வாழ்வில் சிறந்த நண்பர்கள். படத்திற்கான பூஜையும் தொடங்கப்பட்டது. அப்போது கண்ணதாசன் இப்படத்திற்காக ஒரு பாடலையும் தயார் செய்துள்ளார். பூஜைக்கு எம்ஜிஆர் மற்றும் இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் அனைவரும் வந்துள்ளனர்.

கண்டிப்பாக இப்படம் வெற்றிப்படமாக அமையும் என அனைவரும் கூறியுள்ளனர். எம்ஜிஆரும் இப்படத்தினை பற்றி நன்றாக பேசியுள்ளார். பல விநியோகஸ்தகர்களும் பணத்தினை கொடுத்துள்ளனர். ஆனால் படம் பூஜை போட்டதோடு சரி எம்ஜிஆர் படபிடிப்புக்கு வரவில்லையாம். இதனால் பணத்தினை கொடுத்தவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது கண்ணதாசனுக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிங்க:திருப்பூர் குமரன் குடும்பத்திற்கு சிவாஜி செய்த உதவி!.. மறைக்கப்பட்ட சிவாஜியின் மறுபக்கம்…

அதனால் இனி சரிபட்டு வராது என தெரிந்து கொண்ட கண்ணதாசன் இப்படத்தினை எடுப்பதையே நிறுத்தி விட்டாராம். இதை கேள்விபட்ட எம்ஜிஆர் கண்ணதாசனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 10 நாட்கள் கால்ஷீட் கொடுப்பதாகவும் அதற்குள் படத்தினை எடுத்து முடிக்கவேண்டும் எனவும் கடித்தத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் கண்ணதாசன் நேரில் சென்று எம்ஜிஆரிடமே இப்படத்தை நிறுத்திவிட்டேன் என கூறிவிட்டு வந்துவிட்டாராம். பின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து பொது இடத்தில் சினிமாவின் நண்பர்கள் நிஜ வாழ்விலும் நண்பர்களாக இருக்கிறார்கள், சினிமாவில் நடிப்பவர்கள் நிஜ வாழ்விலும் நடிக்கிறார்கள் என கூறியுள்ளார். பின் இப்படத்திற்காக எழுதப்பட்ட பாடலை தனது அடுத்த படமான சிவகங்கை சீமை திரைப்படத்தில் உபயோகித்துள்ளார் கண்ணதாசன்.

இதையும் வாசிங்க:ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள்!.. இந்தப் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.