Cinema History
எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த முதல் படமே டிராப்?!.. கடவுள் போல் வந்து காப்பாற்றிய தயாரிப்பாளர்….
சினிமாவில் வாய்ப்பு என்பது சுலபமில்லை. அதுவும் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு சுலபமாக கிடைத்து விடாது. அப்படி வாய்ப்பு கிடைத்தாலும் அதை தட்டிப்பறிக்க ஆயிரம் பேர் வருவார்கள். அப்போது யாரேனும் ஒருவர் அந்த நடிகருக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். இல்லையேல் வளர முடியாது.
அதேபோல், ஒரு இயக்குனராக வெற்றி பெறுவதற்கும், நிலைத்து நிற்பதற்கும் தயாரிப்பாளர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். ஒரு தயாரிப்பாளர் இயக்குனரை நம்ப வேண்டும். அதுவும் இயக்குனருக்கு முதல் படம் எனில் அவருக்கு துணை நிற்பவர் தயாரிப்பாளர் மட்டுமே. ஒரு அறிமுக இயக்குனரும், நடிகரும் இணைந்து உருவாகும் படத்தின் பின்னால் அவர்களின் வாழ்க்கை இருக்கிறது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவா?.. சரோஜாதேவியா?!.. ஏ.எம்.வீரப்பன் செய்த வேலையில் கொதித்தெழுந்த எம்.ஜி.ஆர்…
அந்த படத்தின் வெற்றி மூலம்தான் அவர்களுக்கு அடையாளம் கிடைக்கும். அப்படி ஒரு அறிமுக இயக்குனரை தயாரிப்பாளர் நம்பிய சம்பவம் பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம். நாடகங்களில் 30 வருடங்கள் நடித்த எம்.ஜி.ஆர் ஒரு கட்டத்தில் சினிமாவில் நுழைந்தார். ஆனால், சிவாஜியை போல அவருக்கு முதல் படத்திலேயே ஹீரோ வாய்ப்பு கிடைக்கவில்லை.
10 வருடங்கள் மற்ற ஹீரோக்கள் நடித்த படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ‘ராஜகுமாரி’ என்கிற படம் மூலம் ஹீரோவாக மாறினார். இந்த படத்தை இயக்கியவர் ஏ.எஸ்.ஏ.சாமி. இந்த படத்தை ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்தது. இந்த நிறுவனத்தில் உருவான பல படங்களுக்கு கதை வசனம் எழுதிய எஸ்.ஏ.சாமி இயக்கிய முதல் படம்தான் ராஜகுமாரி. இந்த படத்தை ஜூபிடர் சோமு, மொய்தீன் இருவரும் இனைந்து தயாரித்தனர். கலைஞர் கருணாநிதி கதை, வசனம் எழுதியிருந்தார். அவருக்கும் வசனகர்த்தாவாக இதுதான் முதல் படம்.
இதையும் படிங்க: இது வேண்டாம் செய்யாதீங்க!. பொங்கியெழுந்த எம்.ஜி.ஆர் – சிவாஜி!. விஜயும் – அஜித்தும் இத கத்துக்கணும்!
ராஜகுமாரி படம் 75 சதவீதம் முடிந்த நிலையில் அந்த படத்தை பார்க்க தயாரிப்பாளர் விரும்பினார்கள். அவர்கள் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சாமி அவர்களின் கருத்தை தெரிந்துகொள்வதற்காக வெளியே நின்றுகொண்டிருந்தார். கண்டிப்பாக அவர்கள் படத்தை பாராட்டுவார்கள் என அவர் நினைத்தார். ஏனெனில், அவர்களுக்கு முன் படம் பார்த்த பலரும் படத்தை பாராட்டியிருந்தனர்.
ஆனால், படம் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்கள் தலையை தொங்க போட்டுக்கொண்டு வந்தனர். சாமியிடம் ‘என்னப்பா இப்படி பண்ணிட்ட?’ என கேட்டிருக்கிறார் மொய்தீன். சோமுவுக்கு படம் பிடிக்கவில்லை. அப்போது ‘ஏற்கனவே ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பில் 2 தோல்விப்படங்களை கொடுத்துவிட்டோம். இதுவும் தோல்வி என்றால் கம்பெனியை இழுத்து மூட வேண்டும். இந்த படத்தை அப்படியே நிறுத்திவிடலாம்’ என மொய்தீன் சொல்ல சாமி அதிர்ந்து போனார்.
அப்போது அவரிடம் ‘இந்த படத்தில் சாமி மற்றும் எம்.ஜி.ஆர் என இரண்டு பேரின் வாழ்க்கை இருக்கிறது. இருவருக்குமே இது முதல் படம். 75 சதவீதம் எடுத்தாச்சி. இன்னும் 25 சதவீதத்தையும் எடுத்து முழுப்படத்தையும் பார்ப்போம். அப்பவும் பிடிக்கலன்னா படத்தை நிறுத்திடலாம்’ என சோமு என்கிற சோமசுந்தரம் சொல்ல மொய்தீனும் அதை ஏற்றுகொண்டார். மீதி படத்தையும் முடித்து படம் உருவான போது அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. அதோடு, ரசிகர்களை கவர்ந்து அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து எம்.ஜி.ஆர், ஏ.எஸ்.ஏ சாமி என இருவருக்கும் சினிமாவில் வாழ்க்கையை துவக்கி வைத்தது.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்காக பாடலாசிரியரை 12 முறை அலைக்கழித்த எம்.ஜி.ஆர்!. அட அது செம ஹிட் பாட்டாச்சே!..