கண்ணதாசனை ஏற்க மறுத்த வாலி!.. முதலமைச்சர் நானா? நீங்களா?!.. எகிறிய எம்.ஜி.ஆர்!..

by சிவா |   ( Updated:2024-03-28 03:25:26  )
vali
X

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டது. அதில் மூன்று கவியரங்கம் நடத்த திட்டமிட்ட நேரத்தில் தன்னுடனே இருந்து வந்த கவிஞர் வாலியை மறந்து பின்னர் எம்.ஜி.ஆர் அவரை கடிந்து கொண்ட உணர்ச்சிர்ப்பூர்வமான தருணம் அது.

தமிழ் அறிஞர்களுடனான கலந்தாய்வுக்கு பிறகு மூன்று கவியரங்கத்தில் ஒன்றினை கண்ணதாசனை கொண்டும், மற்றொன்றை சுரதா, மூன்றாவதை புலமைப்பித்தனை கொண்டும் நடத்த ஒருபுறம் ஏற்பாடுகள் நடந்து வர, கவியரங்கம் நடத்துவதில் கில்லாடியாக பார்க்கப்பட்ட வாலியை கொண்டு கவியரங்கத்தை துவக்கும் திட்டத்தினை மனதில் எம்.ஜி.யார் வைத்திருந்து அதனை வாலிக்கும் தெரியப்படுத்தினார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் விட்ட சாபம்!.. பற்றி எரிந்த ஸ்டுடியோ!.. பதறிப்போன எம்.எஸ்.விஸ்வநாதன்…

கண்ணதாசனை விட வயதில் இளையவனான தான் கவியரங்கத்தை துவக்கி வைப்பது ஏற்புடையதாக இருக்காது என ஒருபுறம், மறுபுறமோ எம்.ஜி.ஆரின் அன்புக்கட்டளையை தவிர்க்கவும் முடியாமல் வாலியோ திணற, அப்போது உடனிருந்த ஓளவை நடராஜனின் மூலமாக இன்னொரு கவியரங்கத்தை தனது தலைமையில் நடத்த எம்.ஜி.யாரிடம் தெரிவிக்க வாலி கோரினார்.

இந்த விஷயம் எம்.ஜி.யாரின் கவனத்திற்கு செல்ல, அவரோ நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும் பொறுப்பினை வாலியிடம் நான் நேரில் அழைத்து தானே சொன்னேன் ஆனால் அவரோ என்னிடம் நேரடியாக சொல்லாமல் ஓளவை நடராஜனின் மூலம் தெரியப்படுத்தியது சரியா என கேட்டதோடு வாலியை அழைத்து ‘நான் முதலமைச்சரா? அல்லது நீங்கள் முதலமைச்சரா?’ என கோபமடைந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.

இதையும் படிங்க: சிவாஜிக்காக கண்ணதாசன் எழுதிய அந்த பாடல்!.. கடைசி வரியை அப்படியா எழுதுவார்?!

இப்படி இருக்கையில் நேரம் பார்த்து ஓளவை நடராஜன் எம்.ஜி.ஆரிடம் கவியரங்கம் நடத்துவதில் வாலியின் திறமையை பற்றி எடுத்துக்கூறியுள்ளார். உடனடியாக வாலியை அழைத்த எம்.ஜி.ஆர் ‘உங்களை பற்றி தெரியாமல் நான் தவறு செய்துவிட்டேன்’ என்று வருந்த வாலி தலைமயில் கவியரங்கம் ஒன்றும் நடந்தேறியது.

தனது நண்பர் என்ற உரிமையை கொண்டாடாமலும் அவரின் பேச்சை தட்டமுடியாமலும், அதே நேரம் தனது திறமை குறைவாக கருதப்பட்ட இப்படிப்பட்ட சிக்கலான தருணத்தை திறமையாக கையாண்டார் வாலி. கவியரங்கத்தில் வாலி உரையாற்றும் போது வரிக்கு வரி கைத்தட்டல் கிடைத்தது. வாலியின் திறமையை பற்றி தெரியாமல் இருந்ததை நினைத்து வருத்தம் தெரிவித்ததோடு, தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்றத்தின் கெளரவ தலைவராக வாலியை நியமித்து பெருமைப்படுத்தி பார்த்தார் எம்.ஜி.ஆர்.

Next Story