Connect with us
kannadasan

Cinema History

கண்ணதாசன் விட்ட சாபம்!.. பற்றி எரிந்த ஸ்டுடியோ!.. பதறிப்போன எம்.எஸ்.விஸ்வநாதன்…

பத்திரிக்கை ஆசிரியர், கவிஞர், பாடலாசிரியர், கதை, வசனகர்த்தா, தயாரிப்பாளர் என தமிழ் திரையுலகில் பல முகங்களை கொண்டவர் கண்ணதாசன். எம்.ஜி.ஆரின் சில படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார். அதன்பின் முழுநேர பாடலாசியராக மாற்றினார். தமிழ் சினிமாவில் பல நூறு பாடல்களை எழுதியிருக்கிறார்.

காதல், தத்துவம், சோகம் என சொன்ன சூழ்நிலை என்றாலும் அசத்தலான வரிகளை எழுதிவிடுவார். அதனால்தான் பல இயக்குனர்கள் தங்களின் படங்களை கண்ணதாசனை எழுத வைத்தனர். எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் பல காதல் மற்றும் தத்துவ பாடல்களை கண்ணதாசன் எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க: நினைத்தது வரவில்லை!.. போராடிய இயக்குனர்!.. களத்தில் இறங்கி அசால்ட் பண்ண கண்ணதாசன்!..

ஒருகட்டத்தில் அரசியலிலும் ஈடுபட்டார். துவக்கத்தில் திமுகவில் இருந்த கண்ணதாசன் அதன்பின் காமராஜர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காங்கிரஸ் பக்கம் போனார். அப்போதுதான் எம்.ஜி.ஆரை கடுமையாக விமர்சித்து அவரின் படங்களில் பாடல்களை எழுதும் வாய்ப்பை இழந்தார்.

நன்றாக படித்தவர்கள், கவிஞர்கள், புலவர்கள் சொல்லும் வார்த்தைக்கு ஒரு சக்தி இருக்கிறது என சொல்வார்கள். அதை அறச்சொல் என சொல்வார்கள். எம்.ஜி.ஆர் கூட தனது பாடல்களில் அறச்சொல் வராமல் பார்த்துக்கொள்வார். அறச்சொல் பலிக்கும் என்கிற நம்பிக்கை இருந்த காலம் அது. அப்படி கண்ணதாசனின் அறச்சொல் எந்த மாதிரியான விபரீதத்தை ஏற்படுத்தியது என்பது பற்றி பார்ப்போம்.

பாடல்களை எழுதி வந்தபோது திரைப்படங்களை தயாரிக்கும் ஆசையும் கண்ணதாசனுக்கு வந்தது. அப்படி அவர் தயாரித்த படம்தான் சிவகங்கை சீமை. இதில், எஸ்.எஸ்.ராஜேந்திரன், வரலட்சுமி, எம்.என்.ராஜம் என பலரும் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்தனர்.

இதையும் படிங்க: காமெடி நடிகரால் வீதிக்கு வந்த கண்ணதாசன்!.. பல பேர் சொல்லியும் கேட்கலயே!…

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. ஒரு ஸ்டுடியோவில் அடுத்தநாள் படப்பிடிப்பை நடத்துவதற்காக அட்வான்ஸ் கொடுத்து புக் செய்திருந்தார் கண்ணதாசன். ஆனால், அன்று அங்கு படப்பிடிப்பை நடத்தப்போன தொழில் நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் உள்ளே செல்ல முடியவில்லை. அதற்கு காரணம் அந்த ஸ்டுடியோவின் முதலாளி அதிக வாடகைக்கு ஆசைப்பட்டு வேறு ஒரு பட கம்பெனிக்கு ஸ்டுடியோவை கொடுத்துவிட்டார்.

அங்கு வந்த கண்ணதாசன் கோபமடைந்து ‘இந்த ஸ்டுடியோ இருப்பதை விட எரிந்து சாம்பலாகட்டும்’ என சாபம் விட்டார். அன்று மாலையே அந்த ஸ்டுடியோ தீப்பற்றி எரிந்தது. அதை நேரில் பார்த்த எம்.எஸ்.வி கண்ணதாசனிடம் ‘இனிமேல் இப்படி யாருக்கும் சாபம் விடாதீர்கள்’ என சொன்னாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top