Connect with us
mgr

Cinema History

ரசகுல்லா வாங்க காசு இல்லாமல் தவித்த எம்ஜிஆர்! உதவிய சர்வர் – பின்னாளில் அந்த சர்வரை எங்கு பார்த்தார் தெரியுமா?

Actor MGR: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக கலைஞராக முதன் முதலில் பாரத் பட்டம் பெற்றவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அவர் நடித்த ரிக்‌ஷாக்காரன் படத்திற்காகத்தான் அவருக்கு பாரத் பட்டம் கிடைத்தது. அந்தப் பட்டத்தை பெறுவதற்காக எம்ஜிஆரும் அவர் சகோதரரும் கல்கத்தா செல்ல நேர்ந்ததாம்.

கல்கத்தா சென்று பாரத் பட்டத்தை வாங்கி கொண்டு வந்த எம்ஜிஆர் நேராக கதாசிரியரான ரவீந்திரனிடம் ‘இந்த கல்கத்தா பயணம் எனக்கு திருப்திகரமாகவும் மன நிறைவாகவும் இருந்தது’ என மிகவும் சந்தோஷத்துடன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத கதைப்பா! லீக்கான ‘விடாமுயற்சி’ படத்தின் கதை – கொஞ்சம் ரிஸ்க்தான்

அதற்கு ரவீந்திரன் அப்படி என்ன கல்கத்தாவில் நடந்தது என கேட்டிருக்கிறார். தமிழ் சினிமா எழுச்சி பெறுவதற்கு முன் எம்ஜிஆரும் சக்கரபாணியும் மாயா மச்சீந்திரா படத்தில் நடிப்பதற்காக கல்கத்தா சென்றார்களாம். அப்போது அவர்களுக்கு  மாத சம்பளம் 200 ரூபாயாம்.

நடித்து முடித்து விட்டு கல்கத்தாவில் மிகவும் பிரபலமானது ரசகுல்லாவாம். அதனால் அதை சாப்பிட வேண்டும் என எம்ஜிஆருக்கு மிகவும் ஆசையாக இருந்ததாம். ஒரு ரசகுல்லாவின் விலை காலணாவாம். அப்போது அங்கு இருந்த சர்வர் ஒருவர்தான் அந்த ரசகுல்லாவை வாங்கிக் கொடுத்தாராம்.

இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு சூடு ஏத்துது!.. டைட் உடையில் கிளுகிளுப்பு காட்டும் ரேஷ்மா…

பின்னாளில் பாரத் பட்டம் வாங்குவதற்காக கல்கத்தா சென்ற எம்ஜிஆரை வரவேற்க ஒரு வயது முதிர்ந்த பெரியவர் வெளியில் மாலையுடன் காத்து கொண்டிருந்தாராம். அவர்தான் எம்ஜிஆருக்கு ரசகுல்லா வாங்கிக் கொடுத்த சர்வராம்.

பார்த்ததும் எம்ஜிஆருக்கு பூரிப்பு தாங்க முடியவில்லையாம். அவரிடம் நலம் விசாரித்துவிட்டு கொஞ்சம் பணத்தை கொடுத்தாராம் எம்ஜிஆர். ஆனால் அந்த பெரியவர் முதலில் வாங்க யோசித்தாராம். அதன் பிறகு எம்ஜிஆர் விடாப்பிடியாக கொடுத்தாராம்.

இதையும் படிங்க: ஹெலிகாப்டரில் வந்த நிவாரணம்! 2 கோடி கொடுத்தாரா அஜித்? யாருக்கும் தெரியாத செய்தி

நன்றிக்கடனை செலுத்திவிட்டோம் என்ற திருப்தியில் கல்கத்தாவில் இருந்து புறப்பட்டாராம் எம்ஜிஆர். இதை ரவீந்திரனிடம் எம்ஜிஆர் கூற ஒரு பேட்டியில் கதாசிரியர் ரவீந்திரன் இதைப் பற்றி தெரிவித்திருக்கிறாராம்.

google news
Continue Reading

More in Cinema History

To Top