Cinema History
வீட்டை விட்டு வெளியே துரத்திய உறவினர்!.. நடுத்தெருவில் நின்ற ஜெயலலிதா.. காப்பாற்றிய நடிகர்…
Jayalalitha mgr: வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் ஜெயலலிதா. இவரின் அம்மா சந்தியா பல திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குடும்ப சூழ்நிலை காரணமாகவும், அம்மா கட்டாயப்படுத்தியதாலும் வேறு வழியின்றியும், விருப்பமே இல்லாமலும்தான் ஜெயலலிதா சினிமாவில் நடிக்க துவங்கினார்.
அவரின் அதிர்ஷ்டம் இரண்டாவது படமே ஆயிரத்தில் ஒருவன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே அவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. அதைத்தொடர்ந்து பல படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி.ஆருடன் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு பேசாமலும் இருப்பார்.
இதையும் படிங்க: குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..
எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவை விட்டுவிட்டு சரோஜா தேவியுடன் அதிக படங்களில் நடிக்க துவங்கியதும், கோபப்பட்ட ஜெயலலிதா சிவாஜி, ஜெய்சங்கர் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து பல படங்களிலும் நடித்தார். இது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்றாலும் ஜெயலலிதாவை அவரால் தடுக்கமுடியவில்லை.
ஜெயலலிதாவின் அம்மா சந்தியாவின் நிஜப்பெயர் வேதவள்ளி. போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் வீட்டை அவர் தனது சொந்தக்காரர் வீட்டின் பெயரில் வாங்கியிருந்தார். அவருக்கு சில லட்சங்கள் அவர் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. சந்தியா இறந்து சில மாதங்களில் ஒரு நாள் இரவில், அந்த சொந்தக்காரர் ஜெயலலிதாவை அவர் தங்கியிருந்த வேதா இல்லத்திலிருந்து விரட்டி விட்டார்.
இதையும் படிங்க: டி.எம்.எஸ் பாடததால் எம்.ஜி.ஆர் வேறு மாதிரி நடித்த பாடல்.. அது சூப்பர் ஹிட் பாட்டாச்சே!..
எங்கு செல்வது.. யாரிடம் உதவி கேட்பது என ஜெயலலிதாவுக்கு எதுவும் தோன்றவில்லை. அப்போது எம்.ஜி.ஆருடன் அவர் பேசாமல் இருந்த காலம். ஆனாலும், அவரிடமே சென்று நிலைமையை விளக்கி உதவி கேட்டார். உடனே எம்.ஜி.ஆர் அவரை ஒரு ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு காரியத்தில் இறங்கினார்.
ஜெயலலிதாவின் உறவினருக்கு கொடுக்க வேண்டிய சில லட்சங்களை கொடுத்துவிட்டு ஒரே நாளில் அந்த வீட்டை ஜெயலலிதாவின் பெயருக்கு மாற்றி பத்திரத்தை ஜெயலலிதாவின் கையில் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..