Cinema History
தமிழ் சினிமாவில் எல்லாத்துக்கும் முதல் படம்!. சத்தமில்லாமல் எம்.ஜி.ஆர் செய்த சாதனை!..
Mgr movies: சினிமா முதலில் ஊமைப்படங்களாகத்தான் துவங்கியது. சார்லி சாப்ளின் படங்களில் கூட வசனங்கள் திரையில் காட்டப்படுமே தவிர பேச மாட்டார்கள். அதன்பின் மெல்ல மெல்ல கதாபாத்திரங்கள் வசனம் பேசும் படங்கள் துவங்கியது. பெரும்பாலும் கதாநாயகர்கள் பாடல்களை அவர்களே பாடி நடிப்பார்கள்.
இப்படித்தான் தமிழ் சினிமாவும் துவங்கியது. 1930,40களில் வெளிவந்த படங்களில் தியாகராஜ பகவாதரும், டி.ஆர்.மகாலிங்கமும் பாடல்களை அவர்களே பாடி நடிப்பார்கள். ஒரு படத்தில் 30 பாட்டுக்கும் மேல் வரும். அதன்பின் மெல்ல மெல்ல பாடல்கள் குறைந்து சண்டை கட்சிகள் கொண்ட படங்கள் உருவானது. அனைத்துமே கருப்பு வெள்ளை திரைப்படங்கள்.
இதையும் படிங்க: குண்டடி பட்டபின் கிண்டலடித்த எதிரிகள்!.. பல நாட்கள் பயிற்சி எடுத்து சாதித்து காட்டிய எம்.ஜி.ஆர்..
40,50களில் பெரும்பாலும் சரித்திர கதைகள் கொண்ட திரைப்படங்கள் அதிகம் உருவானது. இதில், அதிகம் நடித்த நடிகர் எம்.ஜி.ஆர் மட்டுமே. ஏனெனில் குதிரை ஓட்டுவது, வாள் சண்டடை, கத்தி சண்டை, மல்யுத்தம் என எல்லாவற்றையும் முறையாக கற்றுக்கொண்டவர் அவர். எனவே, எம்.ஜி.ஆர் படமென்றால் இது எல்லாம் இருக்கும் என நம்பியே ரசிகர்கள் சினிமாவுக்கு போனார்கள்.
நாடோடி மன்னன் துவங்கி பல கருப்பு வெள்ளை படங்களில் ஹீரோவாக எம்.ஜி.ஆர் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் கருப்பு வெள்ளை போய் ஈஸ்மெண்ட் கலர் வந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பில் வெளிவந்த அந்த முதல் படம் அலிபாபாவும் நாற்பது திருடர்களும். 40,50களில் சில நிறுவனங்களே தொடர்ந்து திரைப்படங்களை தயாரித்து வந்தது.
இதையும் படிங்க: கோபத்தில் ‘முடியாது’ என மறுத்த வாலி!. சமாதானம் செய்த கலைஞர்!.. எம்.ஜி.ஆர் சொன்ன அதே டயலாக்!.
அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த அனைத்து முதல் கலர் படத்திலும் எம்.ஜி.ஆர்தான் ஹீரோ. மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த முதல் கலர் படமான அலிபாபவும் நாற்பது திருர்டர்களும், எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் பகுதி கலர் படமாக வெளிவந்த நாடோடி மன்னன், சரவணா பிலிம்ஸ் தயாரித்த முதல் வண்ணப்படமாக வந்த படகோட்டி, விஜயா கம்பைன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த முதல் வண்ணப்படம் எங்க வீட்டுப் பிள்ளை.
ஏவிஎம் நிறுவனம் சார்பில் வெளிவந்த முதல் அன்பே வா, ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த ஒளி விளக்கு, சத்யா மூவிஸ் சார்பில் வெளிவந்த ரிக்ஷாக்காரன், தேவர் பிலிம்ஸ் சார்பில் வெளிவந்த நல்ல நேரம் ஆகிய அனைத்து படங்களிலும் எம்.ஜி.ஆரே ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் என்னை ஜெயித்துவிட்டார்!. சிறையில் இருக்கும்போதே சொன்ன எம்.ஆர்.ராதா!..