இவன கூட்டிட்டு போனா மீசையை எடுத்துக்குறேன்!.. எம்.ஜி.ஆரின் அம்மாவை மிரட்டிய முதலாளி...

by சிவா |   ( Updated:2024-05-17 05:44:15  )
mgr
X

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆரின் அப்பா கோபால மேனன் நீதிபதியாக பணிபுரிந்தவர். பாலக்காடு பகுதியில் நீதிமன்றத்தில் பணிபுரிந்து வந்த அவர் வேலை மாற்றல் காரணமாக இலங்கைக்கு போனார். அவர் அங்கு பணிபுரிந்தபோது பிறந்தவர்தான் எம்.ஜி.ஆர். ஆனால், உடல் நோய்வாய்ப்பட்டு இலங்கையிலேயே கோபலமேனன் மரணமடைந்தார். இலங்கை அரசு சட்டப்படி சொத்துக்கள் எம்.ஜி.ஆரின் அம்மா சத்யாவுக்கு செல்லவில்லை.

எனவே, வாழ வழி இல்லாமல் தமிழகத்தில் உள்ள கும்பகோணத்திற்கு வந்து அங்கு உறவினர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலை செய்தார் சத்யா. அப்போது, எம்.ஜி.ஆரும், அவரின் அண்ணன் சக்கரபாணியும் சிறுவர்களாக இருந்தார்கள். அம்மா கஷ்டப்படுவதை பார்த்த எம்.ஜி.ஆர் 3ம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.

இதையும் படிங்க: விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!…

ஏனெனில் பசிக்கு சாப்பாடு இல்லை. உடுத்த உடையும் இல்லை. எனவே, உறவினர் ஒருவரின் அறிவுரைப்படி இருவரையும் நாடக கம்பெனிக்கு அனுப்பி வைத்தார் சத்யா. ஏனெனில், நாடக கம்பெனியில் இருந்தால் 3 வேளை சாப்பாடு கிடைக்கும். அதோடு, உடையும் கிடைக்கும். நாடகத்தில் நுழையும்போது எம்.ஜி.ஆரின் வயது 7.

எம்.ஜி.ஆரின் பால்யம், வாலிபம் எல்லாமே நாடகத்தில் கழிந்தது. சினிமாவில் முதன் முதலாக ராஜகுமாரி படத்தில் அவர் ஹீரோவாக நடிக்கும்போது அவரின் வயது 47. அதன்பின் சுமார் 20 வருடங்களுக்கும் மேல் தமிழ் திரையுலகில் பெரிய ஆளுமையாக இருந்தார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் சிறுவனாக நாடகத்தில் முன்னேறினாலும் அவரின் சம்பளம் மட்டும் ஏறவில்லை. அப்போதுதான் கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் இருந்து எம்.ஜி.ஆரை அழைத்து அதிக சம்பளம் கொடுப்பதாக சொன்னார்கள். எனவே, அவரை அங்கு அனுப்ப எம்.ஜி.ஆரின் அம்மா சத்யா முடிவு செய்தார். இதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆரின் முதலாளி சச்சிதானந்தம் பிள்ளை எம்.ஜி.ஆரையும், சக்கரபாணியையும் அழைத்து ‘வேறு கம்பெனிக்கு போகக்கூடாது’ என மிரட்டினார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…

இதை அம்மாவுக்கு கடிதம் மூலம் சொன்னார் எம்.ஜி.ஆர். எனவே, ஊரிலிருந்து கிளம்பி நாடக கம்பெனிக்கு வந்தார் சத்யா. அவரை நாராயண நாயரும், சச்சிதானந்தம் பிள்ளையும் கடுமையாக திட்டினார்கள். ஒருகட்டத்தில் ‘உன் பசங்களை நீ இங்கிருந்து கூட்டிச்சென்றால் நான் மீசையை எடுத்துகொள்கிறேன்’ என சொன்னார் சச்சிதானந்தம் பிள்ளை.

‘நான் கோபால மேனனுக்கு மனைவி எனில் இங்கிருந்து என் பசங்களை கூட்டிப்போவேன்’ என்றார் சத்யா. அதற்கு ‘உன்னை ஜெயிலுக்கு அனுப்புவேன்’ என்றார் சச்சிதானந்தம். ‘எனக்கும் சட்டம் தெரியும். என் கணவரே நீதிபதியாக இருந்தவர்’ என சொன்னார் சத்யா. சண்டை முடிவுக்கு வந்து தனது மகன்களை அங்கிருந்து அழைத்து சென்று கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டார்.

Next Story