12 நாளில் எடுத்து சூப்பர் ஹிட் அடித்த எம்.ஜி.ஆர் படம்!.. அட அந்த படமா?!...

50,60 களில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே நாடகங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். சில வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறியவர். எப்போது கதாநாயகனாக நடிக்க துவங்கினாரோ அதன்பின் எம்.ஜி.ஆரின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
தன் திரை வாழ்வில் பல ஹிட் படங்களை கொடுத்தார். சினிமாவில் பல அவமானங்களை சந்தித்துதான் எம்.ஜி.ஆர் வளர்ந்தார். அதுவும் துணை நடிகராக இருந்தபோது அவர் பட்ட அவமானங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவருடன் நடிக்கவே பல நடிகைகள் மறுத்தனர். எம்.ஜி.ஆர் மிகவும் கஷ்டப்பட்டு சொத்தை விற்று, கடன் வாங்கி நாடோடி மன்னன் படத்தை தயாரித்து, இயக்கி, நடித்தபோது பல சவால்களை சந்தித்தார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…
அப்படத்தில் நடித்த பானுமதி பாதி படம் முடிந்த நிலையில் இனிமேல் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என விலகினார். எனவே, அவருக்கு பதில் சரோஜா தேவியை நடிக்க வைத்து படத்தை முடித்தார். எம்.ஜி.ஆர். எனவே, படத்தின் முதல் பாதியில் பானுமதியும் மீதிப்பாதியில் சரோஜாதேவியும் வருவார்கள். ஆனாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர்.
எம்.ஜி.ஆரும், சின்னப்ப தேவரும் சிறு வயது முதலே நண்பர்களாக இருந்தனர். எம்.ஜி.ஆர் ஹீரோ ஆன பின் தேவரை தயாரிப்பாளர் ஆக்கினார். அப்படி உருவானதுதான் தேவர் பிலிம்ஸ். எம்.ஜி.ஆரை வைத்து அதிக திரைப்பப்படங்களை இந்நிறுவனம்தான் தயாரித்தது. தாய்க்கு பின் தாரம் முதல் நல்ல நேரம் வரை 16 படங்களில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
இதையும் படிங்க: எனக்கு பாட்டெழுதாம வெளிய போக முடியாது!. கண்ணதாசனை அறையில் பூட்டிய எம்.ஜி.ஆர்….
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார், அசோகன், நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்து 1966ம் வருடம் வெளியான திரைப்படம் முகராசி. இந்த படத்தில்தான் எம்.ஜி.ஆருடன் முதன் முதலாக ஜெமினி கணேசனும் நடித்திருந்தார். இப்படத்தை எம்.ஏ. திருமுகம் இயக்கியிருந்தார்.
எம்.ஜி.ஆர், சினிமா - அரசியல் என பரபரப்பாக இருந்த நேரம் அது. எனவே, இப்படத்தின் படப்பிடிப்பை 12 நாட்களில் முடித்தனர். சிலர் 18 நாட்கள் என்றும் சொல்கிறார்கள்.
எப்படி பார்த்தாலும் மிகவும் குறைந்த நாட்களில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. பொதுவாக எம்.ஜி.ஆர் - சின்னப்ப தேவர் கூட்டனியில் உருவாகும் படங்கள் குறைவான பட்ஜெட்டில், குறைவான நாட்கள் எடுத்துவிடுவார்கள். ஒன்று இரண்டு தவிர எல்லாமே வெற்றிப்படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!.. அப்புறம் நடந்ததுதான் மேஜிக்!…