MGR: தமிழில் சதிலீலாவதி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எம்ஜிஆர். என்னதான் தான் ஒரு நடிகராக இருந்தாலும் நிஜ வாழ்விலும் மக்களுக்கு பிடித்த ஒரு மனிதரும் கூட.
இவர் தனது திரைப்படங்களின் மூலம் பல வித கருத்துகளை மக்களுக்கு எடுத்து கூறியவர். இவரின் படங்கள் என்றாலே அந்த கால மக்கள் மிகவும் விரும்பக்கூடியதாக அமைந்தன. சிவாஜி எம்ஜிஆர் என இருவரும் போட்டி போட்டு கொண்டு நடித்த காலங்களும் உண்டு.
இதையும் வாசிங்க:எம்ஜிஆர் மீது எந்தளவு பற்று கொண்டவர் கேப்டன்! அதற்கு ஒரு உதாரணமான சம்பவம் இதோ
இவர் நடித்த நாடோடி மன்னன், மலைகள்ளன் போன்ற திரைப்படங்கள் சினிமாவில் இவருக்கென தனி அக்கீகாரத்தையே உருவாக்கின. அரசியல் ஆர்வம் கொண்ட ஏம்ஜிஆர் மூன்று முறை தமிழக முதல்வராகவும் இருந்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்றுதான் புதுமைபித்தன். இப்படத்தை இயக்குனர் டி.ஆர்.ரமண்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் எம்ஜிஆருடன் இணைந்து டி.ஆர்.ராஜகுமாரி, பி.எஸ்.சரோஜா போன்ற நடிகைகளும் நடித்திருந்தனர். பி.எஸ்.சரோஜா இயக்குனர் ரமண்ணாவின் மனைவியும் கூட.
இதையும் வாசிங்க:நடிகரை சரக்கடிக்க வச்சி மாட்டிவிட்ட சந்திரபாபு!.. கடுப்பான எம்ஜிஆர்.. படப்பிடிப்பில் நடந்த களேபரம்..
இப்படத்தில் எம்ஜிஆரும் பி.எஸ்.சரோஜாவும் சண்டை போடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. ஆனால் எம்ஜிஆர் தான் அந்த சண்டை காட்சியில் நடிக்க மாட்டேன் என கூறிவிட்டாராம். ஒரு பெண்ணுடன் நான் சண்டை போட்டால் அது மக்கள் ரசிக்கும்படி இருக்காது என கூறி மறுத்துவிட்டாராம்.
ஆனால் அக்காட்சி படத்திற்கு மிகவும் முக்கியமான காட்சியாம். அப்போது இயக்குனர் ரமண்ணா எம்ஜிஆரிடம் நீங்கள் இடது கையால் சண்டை போடுங்கள்… அது வித்தியாசமாக இருக்கும்… மக்களும் ரசிப்பார்கள் என ஆலோசனை கூறினாராம். அப்போது எம்ஜிஆர் அவரின் பேச்சை கேட்டு அந்த காட்சியில் நடித்தாராம். ஆனால் அந்த காட்சி மிகப்பெரிய வெற்றியையும் சந்தித்தது. ஆனால் அந்த காட்சி வெற்றி பெற்றதற்கு சரோஜாவின் பங்கு மிகவும் முக்கியமும் கூட.
இதையும் வாசிங்க:பிடிவாதம் பண்ணிய எம்ஜிஆர் மனைவி… ஆனால் கடைசில கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாங்களே!…
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…