பட்டுக்கோட்டையார் எழுதிய பாடலால் அதிர்ந்து போன எம்ஜிஆர்... அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

பட்டுக்கோட்டை கண்ணதாசனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டதுக்குக் காரணம் எம்ஜிஆருடன் நடந்த சந்திப்பு தான். கம்யூனிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வீதி நாடகங்கள் நடத்துவாங்க. மக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் நல்ல கருத்துகளை சொல்வதற்காக இப்படி நாடகங்கள் போடுவதுண்டு.

நாட்டுல நடக்கக்கூடிய சம்பவத்தைப் பற்றி அதாவது அரசாங்கத்தை எதிர்த்து எழுதுவதாக அமைந்த பாடல் இது. சினிமாவில் கற்பனையாக கொடுக்கும் சூழலுக்கு கவிஞர்கள் பாடல்கள் எழுதுவாங்க. ஆனா இவரு மக்களோட கவிஞர் என்பதால் இதை எல்லாம் திரைப்படங்களில் பயன்படுத்தலாம் என எம்ஜிஆர் தெரிந்து வைத்து இருந்தார்.

Nadodi Mannan

Nadodi Mannan

வீரப்பன் என்பவர் தான் பட்டுக்கோட்டையை எம்ஜிஆருக்கு அறிமுகப்படுத்தி வைத்தாராம். நாட்டுல நடக்குற உண்மைச் சம்பவங்களுக்கு பட்டுக்கோட்டையார் பாட்டு எழுதி வைத்தா எங்கிட்ட சொல்லுங்கன்னு வீரப்பன்கிட்ட சொல்றாரு.

அதனால ஒரு ஞாயிற்றுக்கிழமை வீரப்பன் பட்டுக்கோட்டையாரைப் பார்க்கப் போறாரு. அங்கு அவரது நண்பர்களும் அவருடன் இருக்காங்க. ஆனா அவங்க எல்லாரும் தூங்கிக்கிட்டு இருக்காங்க. பட்டுக்கோட்டையார் சுறுசுறுப்பான ஆளு. அதனால அவங்களை எழுப்பி வாங்க காலாற நடந்து வரலாம்னு வெளியே அழைச்சிட்டுப் போறாரு.

அங்கே ஒரு கடைல சின்னப் பையன் உட்கார்ந்து தூங்கிக்கிட்டு இருக்கான். 'டேய் தம்பி தூங்காதடா... இப்படி கடையில தூங்கினா போட்ட முதல் எப்படி கிடைக்கும்?'னு சொல்றாரு. 'கடமையை ஒழுங்கா செஞ்சா புகழ் கிடைக்கும்'னு சொன்னாரு. திரும்ப வீட்டுக்கு வந்தா அங்கே வந்ததும் நண்பர்களும் தூங்க ஆரம்பிச்சிடறாங்க. இந்த மாதிரி ஒரு சூழல் வந்தா பட்டுக்கோட்டையாரே பாட்டு எழுதி டியூன் போட்டு மியூசிக் பண்ணி பாட ஆரம்பிச்சிடுவாரு.

இப்படி பண்றவங்களுக்கு வாத்தியக்காரர்கள்னு சொல்வாங்க. அப்படி அவரு எழுதிப் பாடுன பாட்டுத் தான் 'தூங்காதே தம்பி தூங்காதே' பாடல். பெட்டிக்கடையில் தூங்கின பையனுக்கு பட்டுக்கோட்டை சொல்ற அறிவுரையில பிறந்த பாடல் இது. 1957ல் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி படுதோல்வி அடைகிறது. எதிர்கட்சியில் இருந்து இறங்கிய அந்த இடத்திற்கு திமுக வருகிறது. இந்த தோல்விக்கு என்ன காரணம்னு கூட்டம் நடக்குது. அதில் பட்டுக்கோட்டையாரும் கலந்து இருக்கிறார்.

இதற்கு என்ன காரணம்னு யோசிக்கும்போது எல்லாரையும் உற்சாகப்படுத்துவது தான் வழின்னு நினைச்சு தூங்காதே தம்பி தூங்காதே என்று பாடலைப் பாடுகிறார். இங்கு தான் இந்தப் பாடல் முழுவடிவம் பெறுகிறது. அரசியலில் சோர்வு கூடாது என்பதைப் பாடலில் சொல்கிறார். இதைக் கவனித்த வீரப்பன் எம்ஜிஆரிடம் சொல்கிறார். அப்போது எம்ஜிஆர் மிகப்பெரிய சவாலில் இருக்கிறார். ஏகப்பட்ட பொருட்செலவில் நாடோடி மன்னன் எடுத்து வருகிறார்.

இதையும் படிங்க... சிம்பு பண்ணிய துரோகம்! துடைக்க வந்த அஜித்.. ‘குட் பேட் அக்லி’யில் இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்தப் படம் ஓடினால் நாடோடி மன்னன். ஓடலைன்னா நாடோடின்னு அவரே சொல்கிறார். இந்தப் படத்திற்காக முதலில் இருந்து மறுபடியும் மறுபடியும் சில காட்சிகளை எடுத்துப் படத்தை செதுக்குகிறார். எம்ஜிஆர் இந்தப் பாடலுக்கான சூழலை உருவாக்குகிறார். இந்தப் பாடலும் மிகப்பெரிய வெற்றி அடைகிறது. இந்தப் படத்தில் நடித்து தயாரித்து இயக்கியவர் எம்ஜிஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Next Story