எம்.ஜி.ஆர் படத்தின் மீது பந்தயம் கட்டி கத்தையாக பணம் வாங்கிய நபர்!. அவர் சொன்னது அப்படியே நடந்துச்சே!..
நாடகங்களில் நடிக்க துவங்கி பின்னர் சினிமாவில் நுழைந்தவர் எம்.ஜி.ஆர். சினிமாவில் கூட பெரும்பாலும் சில வேடங்களில்தான் தொடர்ந்து நடித்தார். ஆனால், 30 வருட நாடக அனுபவத்தில் பல கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால், சினிமாவுக்கு வந்தபின் மன்னன், போராளி, ஏழைகளுக்கு குரல் கொடுக்கும் கம்யூனிஸ்ட் ஆகிய கதாபாத்திரங்களில்தான் அதிகம் நடித்தார்.
சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர்தான் எம்.ஜி.ஆர். ராஜகுமாரி என்கிற படம் மூலம் கதாநாயகனாக நடிக்க துவங்கினார். அதன்பின் பைத்தியக்காரன், அபிமன்யூ, ராஜமுக்தி என தொடர்ந்து சில படங்களில் நடித்தார். அதன்பின் அவர் எடுத்த திரைப்படம்தான் நாடோடி மன்னன்.
இதையும் படிங்க: ஹாலிவுட் பட வசூலை தட்டி தூக்கிய எம்.ஜி.ஆர்!.. நேரில் சந்தித்து வாழ்த்து சொன்ன ஹாலிவுட் ஹீரோ!.
ஒரு ஆங்கில படத்தில் வந்த கதாபாத்திரத்தை அடிப்படியாக வைத்து இந்த படத்தின் கதையை எம்.ஜி.ஆர் உருவாக்கியிருந்தார். அதே ஆங்கில படத்தின் கதையை மையமாக வைத்து நடிகை பானுமதியும் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டார். எம்.ஜி.ஆரிடம் இதுபற்றி பேசி அவரை விலகவும் சொன்னார். ஆனால், எம்.ஜி.ஆர் பின் வாங்கவில்லை. எனவே, நீங்களே இந்த படத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என சொல்லிவிட்டார்.
அப்படி எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்த திரைப்படம்தான் நாடோடி மன்னன். இந்த படத்தில் அதுவரை தான் சம்பாதித்த பணத்தை முதலீடு செய்தார் எம்.ஜி.ஆர். அதோடு, தனது வீட்டை அடமானமும் வைத்தார். இதனால் எம்.ஜி.ஆர் இதோடு ஒழிந்தார். இந்த படம் கண்டிப்பாக ஓடாது என்றெல்லாம் திரையுலகில் சிலர் பேசினார்கள்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எடுக்க நினைத்த ‘இணைந்த கைகள்’!… பல வகைகளிலும் வந்த தடை!.. நடந்தது இதுதான்!..
எம்.ஜி.ஆரின் படங்களுக்கு புகைப்பட கலைஞராக இருந்தவர் நாகராஜ ராவ். நாடோடி மன்னன் படத்தை சில ஆயிரம் அடிகளை எடுத்தபின் வினியோகஸ்தர்களுக்கு போட்டு காட்டினார் எம்.ஜி.ஆர். அப்போது அவரோடு அவரின் அண்ணன் சக்கரபாணி மற்றும் நாகராஜ் ராவ் ஆகியோர் இருந்தனர். படத்தை பார்த்த நாகராஜ ராவ் ‘இந்த படம் எம்.ஜி.ஆர் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படமாக இருக்கும்’ என சக்கரபாணியிடம் பெட் வைத்தார்.
அவர் சொன்னபடியே நடந்தது. இந்த படத்தின் வெற்றிவிழாவில் நாகாரஜ் ராவுக்கும் கேடயம் கொடுத்தார் எம்.ஜி.ஆர். அப்போது ‘பந்தயம் கட்டி வெற்றிபெற்றுவிட்டீர்கள். என் அண்ணனிடம் பணம் வாங்கிவிட்டீர்களா?’ என கேட்டார் எம்.ஜி.ஆர். அவரோ ‘உங்க அண்ணன் கஞ்சன். காசே கொடுக்கல’ என சொல்ல, அருகில் இருந்த சக்கரபாணியின் காதில் ஏதோ சொன்னார் எம்.ஜி.ஆர். அடுத்தநாள் நாகராஜ் ராவை வீட்டிற்கு வர சொன்னார் சக்கரபாணி. சக்கரபாணி சென்றபோது அவரின் கையில் ஒரு கவரை கொடுத்தார். அதில், கத்தையாக பணம் இருந்தது.