Cinema History
அப்பனுக்கே பாடம் புகட்டிய எம்ஜிஆர்… இது எப்போ நடந்தது? பழசு கூட புது மேட்டரா இருக்கே..!
எம்ஜிஆரை மக்கள் இந்த அளவு தூக்கி வைத்துக் கொண்டாட பல காரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று தான் இந்த சம்பவம். தன்னை அவமரியாதையாக நடத்தியவர்களைக் கூட அவர் சிறப்பாகக் கவனிப்பாராம். அப்படி என்ன சிறப்பு என்று பார்ப்போமா…
எம்ஜிஆர் அப்போது சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்புக்கு சொந்தமான ஒரு இடம் தான் நெப்டியூன் ஸ்டூடியோ. அங்கு நடந்த ஒரு படப்பிடிப்பில் எம்ஜிஆர் கலந்து கொண்டார். அந்தப் படத்தில் சிறிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இதையும் படிங்க... மே மாசம் யார் யார் படங்கள் ரிலீஸ் ஆக போகுதுனு தெரியுமா? அடிக்கிற வெயிலுக்கு இது பரவாயில்லை
ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ஷாட்டுக்கு கூப்பிடும் வரை வெளியில் தான் உட்கார்ந்து இருப்பாராம். எங்காவது சென்று விட்டால் தேடிக் கொண்டு இருப்பார்கள். ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடும் என்ற நிலைமை இருப்பதால் அந்த இடத்தை விட்டு நகராமல் இருப்பாராம்.
ஒருநாள் அப்படி உட்கார்ந்து இருந்தாராம். அப்போது அங்கு வேலை பார்த்த அப்பன் என்ற ஒருவர் கூஜாவில் தண்ணீர் கொண்டு சென்றார். எம்ஜிஆருக்கு கடுமையான தாகம். அப்பனைப் பார்த்து, “அண்ணே, குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தாங்க” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இருய்யா…, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டு போறேன். நீ வேற..” என எரிச்சலுடன் போனாராம். அதன்பிறகு அவரும் தண்ணீர் கொண்டு வரவே இல்லையாம்.
இது நடந்து சில ஆண்டுகளில் எம்ஜிஆர் முன்னணி கதாநாயகன் ஆகி விட்டார். அதே நெப்டியூன் ஸ்டூடியோவையே விலைக்கு வாங்கிவிட்டார். அதற்கு தன் தாயாரின் பெயரை வைத்தார். அன்று தண்ணீர் கொடுக்காமல் அலட்சியம் செய்த அப்பனுக்கு இப்போது எம்ஜிஆர் தான் முதலாளி.
ஸ்டூடியோவில் இருந்த அப்பனைப் பார்த்ததும், எம்ஜிஆர் பழைய சம்பவங்களை ஓடவிட்டாராம். வேலை போச்சு என மனதிற்குள் பயந்த அப்பன் எம்ஜிஆரைப் பார்த்துக் கண்கலங்கியபடி நின்றாராம். “உங்களுக்கு எவ்வளவு சம்பளம்” என எம்ஜிஆர் கேட்க, “200 ரூபாய்” என்றான் அப்பன் பயந்தபடி.
இதையும் படிங்க… யார் சொல்லியும் கேட்காத அஜித் ஆதிக் சொல்லி கேட்டாரே! இதுதான் ஃபேன் பாய் சம்பவமா?
“இந்த மாதம் முதல் உங்களுக்கு 400 ரூபாய்” என்று அவரது தோள்களில் தட்டியபடி சொன்னாராம் எம்ஜிஆர். அப்போது தான் அப்பனுக்கு தனக்கே எம்ஜிஆர் என்ற அந்த பொன்மனச்செம்மல் பாடம் நடத்தியது தெரியவந்தது.