அசோகன் செய்த வேலை...பாடம் புகட்டிய எம்.ஜி.ஆர்...சுவாரஸ்ய பின்னணி...
கோலிவுட்டில் இயக்குனர் டி.ஆர்.ராமண்ணா மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோகன். 1961 இல் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தின் மூலம் பொதுமக்களின் கவனத்தைப் பெற்றார். அவர் நாயகனாக நடித்த படங்கள் சுமார் வெற்றியைப் பெற்றன. இதனால் நாயகன் டூ வில்லன் என தனது பாணியை மாற்றினார்.
அசோகனை பரவலாக பலருக்கும் பிடிக்க காரணமாக அமைந்தது இரண்டு படங்கள் தான். வல்லவனுக்கு வல்லவன் என்ற படத்தில் ஆதரவற்ற பயணியாக அசோகனின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதுபோல, கர்ணன் படத்தில் துரியோதனனாக நடித்தார். அதுவும், அவரை நல்ல இடத்திற்கு கொண்டு சென்றது.
ஆனால், அசோகனிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்து இருக்கிறது. பல இடங்களுக்கு செல்லும் அவர், பலரின் விஷயங்களை தெரிந்து கொண்டு அதை பிறரிடம் சொல்லும் பழக்கத்தை கொண்டு இருந்தார். இது பல இடங்களில் பிரச்சனையை ஏற்படுத்தியது.
இதை நன்கறிந்து இருந்தார் நடிகர் எம்.ஜி.ஆர். அந்த சமயம், அசோகன் தயாரிப்பில் நேற்று இன்று நாளை என்ற படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. எம்.ஜி.ஆரும் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு கால்ஷூட்டும் கொடுத்து இருந்தாராம். படப்பிடிப்பும் துவங்கி நடைபெற்றதாம். ஆனால் எம்.ஜி.ஆர் சரியாக சூட்டிங் வராமல் படப்பிடிப்பை தாமதப்படுத்தி கொண்டே இருந்தாராம்.