ரஜினியை வச்சி படம் எடுக்குறியா?!. தயாரிப்பாளரிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்!.. நடந்தது இதுதான்!..

1960 முதல் 80 வரை தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அரசியலில் நுழைந்த பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதிலும், முதல்வர் ஆனபின் அவரால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. 80களில் தமிழ் சினிமாவை கலக்கிய பல முக்கிய பிரபலங்கள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.
பாரதிராஜா, கமல்ஹாசன், பாக்கியராஜ், சத்தியராஜ் போன்றோர் எம்.ஜி.ஆருடன் நெருங்கி பழகினார்கள். ஆனால், ரஜினி மட்டும் விலகியே இருந்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் மட்டுமே அவர் நெருங்கி பழகினார். சிவாஜியின் அன்னை இல்லம் வீட்டிற்கும் அடிக்கடி சென்றுவந்தார்.
இதையும் படிங்க: ரஜினிகாந்துக்கே இந்த நிலைமையா!.. ’கூலி’ படத்தை ஆரம்பத்திலேயே காலி பண்ண முடிவெடுத்த இளையராஜா?..
ஆனால், எம்.ஜி.ஆரை போய் சந்தித்து பேசவோ, அவரிடம் உதவி கேட்கவோ ரஜினி செல்லவே இல்லை. அதற்கு பின்னணியில் பல காரணங்களும் சொல்லப்படுகிறது. ரஜினி சினிமாவில் ஸ்டைலாக சிகரெட் பிடித்தே பிரபலமானவர். ஆனால், தனது ரசிகர்கள் தன்னை பின்பற்றி எந்த கெட்டப்பழக்கத்திற்கும் அடிமையாக கூடாது என நினைத்த எம்.ஜி.ஆர் அவரின் படங்களில் சிகரெட் குடிப்பது போலவும், மது அருந்துவது போலவும் நடிக்கவே மாட்டார். ஆனால், ரஜினி இதற்கு நேர்மாறானவர்.
இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதேபோல், நடிகை லதாவிடம் ரஜினி நெருங்கி பழகியதாகவும் அது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் ஒரு செய்தி உண்டு. மேலும், பில்லா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஜெயலலிதாவை நடிக்க கேட்டனர். ஆனால், அவர் நடிக்கவில்லை. அதற்கு பின்னணியில் எம்.ஜி.ஆர் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு.
இதையும் படிங்க: கடுப்பான ரஜினி!.. இந்தியன் 2-வுக்கு வேற பிளான் போட்ட ஷங்கர்!.. எல்லாத்துக்கும் காரணம் லைக்காதானாம்!..
எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவர் சத்யா மூவில் நிறுவனம் சார்பாக பல திரைப்படங்களை தயாரித்தவர். அதில் எம்.ஜி.ஆர் படங்களும் அடக்கம். இவர் ரஜினியை வைத்து ராணுவ வீரன், மூன்று முகம், தங்க மகன், ஊர்க்காவலன் ஆகிய படங்களை தயாரித்தார். இது எம்.ஜி.ஆருக்கு கோபத்தை ஏற்படுத்த ரஜினியை வைத்து படம் தயாரிப்பதை நிறுத்திவிட்டார் என சொல்லப்படுகிறது.
அதேநேரம், எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர் மீண்டும் ரஜினியை வைத்து பணக்காரன், பாட்ஷா அகிய படங்களை தயாரித்தார். இதில், பாட்ஷா திரைப்படம் ரஜினியின் சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.