Cinema History
ஜோதிடம், ஜாதகம் மீது இவ்ளோ நம்பிக்கை கொண்டவரா எம்ஜிஆர்? தேடி வந்த அரிய வாய்ப்பை தள்ளி வைத்த காரணம்
Actor MGR: தன்னுடைய அன்பாலும் அக்கறையாலும் ஒட்டுமொத்த சினிமாவையே தன் கட்டுக்குள் வைத்த ஒரே நடிகர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். நடிகர்களில் முதன் முதலில் பாரத ரத்னா விருதை வாங்கியவரும் நம் பொன்மனச் செம்மல்தான். குடும்ப வறுமை காரணமாக எம்ஜிஆர் தன் சகோதரனுடன் சேர்ந்து நாடக் கலையில் ஈடுபட்டார்.
நாடகத்தில் நடித்த அனுபவத்தால் பல வருடங்கள் கழித்துதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. ஆரம்பத்தில் கிடைத்த கேரக்டரில் நடித்து வந்த எம்ஜிஆர் ராஜகுமாரி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: தாமதமாக வந்து வாங்கிகட்டிய ராதா… கடுப்பான நடிகர் திலகம்… அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?…
அண்ணாவின் பேச்சால் ஈர்க்கப்பட்ட எம்ஜிஆர் அரசியலிலும் குதித்தார். எம்ஜிஆருக்கு இதயக்கனி என்ற பெயரும் உள்ளது. அது அறிஞர் அண்ணாவால் எம்ஜிஆருக்கு வைக்கப்பட்ட பெயர். தான் நடிக்கும் படங்களின் மூலம் பல நல்ல கருத்துக்களை மக்களுக்கு கொண்டு சேர்த்தார் எம்ஜிஆர்.
அதனாலேயே ஏழை எளிய மக்களின் செல்வாக்கை எம்ஜிஆரால் மிக எளிதாக பெற முடிந்தது. தன் படங்களில் ஆன்மீகத்தை பற்றி அதிகமாக பேசாத எம்ஜிஆர் எந்தளவுக்கு ஜோதிடம், ஜாதகம், நல்ல நேரம் , கெட்ட நேரம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளது என்பதை விளக்கும் விதமாக ஒரு சம்பவம் நடந்ததாம்.
இதையும் படிங்க: என்னங்கடா நீங்க? நியாயமே இல்லமா அவங்க செஞ்ச தப்புக்கு.. எல்லாம் முத்துக்கிட்ட சண்டைக்கு வரீங்க..!
ஒளிவிளக்கு திரைப்படத்திற்காக எஸ்.எஸ்.வாசன் தன் மகனான எஸ்.எஸ்.பாலனிடம் போய் எம்ஜிஆரை பார்த்துவிட்டு வா என்று சொன்னாராம். உடனே பாலனும் எம்ஜிஆர் வீட்டுக்கு போன் செய்து எப்படி பேச வேண்டும் என்றே அவருக்கு தெரியாததால் எம்.ஜி.ராமச்சந்திரன் இருக்கிறாரா? என்று கேட்டிருக்கிறார்.
எதிரே போனில் இருந்த வேலையாள் ஓ சின்னவரா? என்று கேட்டு விட்டு எம்ஜிஆரை அழைக்க போனாராம். அப்பொழுதுதான் பாலனுக்கு எம்ஜிஆரை சின்னவர் என்று தான் அழைக்க வேண்டுமோ என தெரிந்ததாம். உடனே வந்து போனை எடுத்த எம்ஜிஆர் யார் என்ன என கேட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சினிமாவே வேணாம்னு நினைச்ச கவிதா… ஆனா கொக்கி போட்டு தூக்கிய இயக்குனர்…
பாலன் விவரத்தை சொல்ல அதற்கு எம்ஜிஆர் ‘இன்றைக்கு அஷ்டமி, நாளைக்கு நவமி. இரண்டு நாள்கள் கழித்து பேசலாம்’ என சொன்னாராம். இதிலிருந்து நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்கும் பழக்கமுடையவர்தான் எம்ஜிஆர் என்று தெரிகிறது.