‘கோட்’ படத்துல இருக்கிற பெரிய மைனஸ் இதுதான்! ரிலீஸுக்கு முன்னாடியே இப்படியா?

by Rohini |   ( Updated:2024-08-25 04:48:45  )
vijay 2
X

vijay 2

Goat Movie: கோட் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடியே அந்தப் படத்தில் உள்ள ஒரு மைனஸை மீசை ராஜேந்திரன் கூறியது பெரும் வைரலாகி வருகின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் கோட். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

படத்தின் டிரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கிறது. அதற்கு முன் ரசிகர்கள் ஒரு பதற்றத்தில்தான் இருந்தார்கள். ஏனெனில் படத்தில் அமைந்த பாடல்கள்தான் காரணம். இதுவரை மூன்று பாடல்கள் வெளியான நிலையில் ஒரு பாடல் கூட ரசிகர்கள் கொண்டாடும் பாடலாக அமையவில்லை.

இதையும் படிங்க: படக்குழுவே சொல்லாத அப்டேட்! கோட் பட சீக்ரெட்டை இப்படி உடைச்சிட்டாரே மீசை ராஜேந்திரன்

ஆனால் டிரெய்லரில் மாஸ் காட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர்கள் மீண்டும் இந்தப் படத்தில் ஒன்று சேர்ந்து நடிப்பது ஒரு கூஸ் பம்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மோகன் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். 80களில் ஒரு சார்மிங் ஹீரோவாக லவ்வர் பாயாக இருந்தவர் மோகன். அனைத்து பெண்களின் கனவு நாயகனாக இருந்தவர். சாதுவான முகம். அழகான சிரிப்பு என ரசிக்கும் படியான முகத்தோற்றத்தை கொண்டவர் மோகன்.

அவரை எப்படி வில்லனாக நினைத்தார் வெங்கட் பிரபு என்றுதான் தெரியவில்லை என பல பேர் கூறி வருகிறார்கள். கிட்டத்தட்ட 60 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் மோகன் எல்லா படங்களுக்கும் டப்பிங் வாய்ஸ் பயன்படுத்திதான் நடித்திருக்கிறார். இவரது சொந்தக் குரல் ஒரு சில படங்களில் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இதையும் படிங்க: படப்பிடிப்புக்கு வரமுடியாமல் போன ஸ்ரீபிரியா! பதிலுக்கு இயக்குனர் கொடுத்த பரிசு

அதற்கு காரணம் மோகனின் வாய்ஸ் ஒரு மாதிரியான கீச் குரலாக இருக்கும் என்பதால்தான். இப்படி இருக்க கோட் படத்திலும் அவரது சொந்தக் குரலில் தான் பேசி நடித்திருக்கிறார் மோகன். இது தான் படத்தின் மைனஸ் என மீசை ராஜேந்திரன் கூறியிருக்கிறார். அந்த கால வில்லன்களை எடுத்துக் கொண்டால் வீரப்பன், நம்பியார் இவர்களின் குரல்களில் ஒரு கம்பீரம் இருக்கும். அதுதான் வில்லன் கேரக்டருக்கும் தேவையான ஒன்றும் கூட.

mohan

#image_title

ஆனால் டிரெய்லரில் பார்க்கும் போது மோகனின் வாய்ஸ் கீச் குரலாகவே இருக்கிறது. அந்த ஒரு பேஸ் வாய்ஸ் இல்லை. என்னைப் பொறுத்தவரைக்கும் கோட் படத்தில் இது ஒரு மைனஸாக இருக்கும் என மீசை ராஜேந்திரன் கூறினார்.

இதையும் படிங்க: கோட் படத்தில் குட்டி விஜய் இந்த பிரபலத்தின் மகனா? விஜய் என்ன கேட்டார் தெரியுமா?

Next Story