சூப்பர்ஸ்டாரை களமிறக்கும் முருகதாஸ்!.. பக்காமாஸ் ஆக்‌ஷன் விருந்தாக உருவாகும் எஸ்.கே 23!..

by சிவா |
sivakarthikeyan
X

SK23: தீனா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்து விஜயகாந்தை வைத்து அவர் இயக்கிய ரமணா திரைப்படம் முருகதாஸ் எந்த மாதிரியான இயக்குனர் என காட்டியது. இந்த படத்தின் வெற்றி அவரை பெரிய இயக்குனர்கள் வரிசையில் அமர வைத்தது.

அதன்பின் சூர்யாவை வைத்து அவர் இயக்கிய கஜினி படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் ஆகிய படங்களை இயக்கினார். இதில், ஸ்பைடர், தர்பார் ஆகிய படங்கள் தோல்வி படங்களாக அமைந்தது. எனவே, விஜயை வைத்து அவர் எடுக்கவிருந்த படத்திலிருந்தும் அவர் தூக்கப்பட்டார்.

இதையும் படிங்க: 4 நாள்ல ஜப்பான் கதை கந்தல்!.. ஷோவே கேன்சல்.. ஜிகர்தண்டா நிலைமை படுமோசம்.. இதுலாம் தீபாவளி வின்னரா?

தர்பார் வெளியாகி கிட்டத்தட்ட 3 வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரை வேறெந்த படத்தையும் முருகதாஸ் இயக்கவில்லை. அதேநேரம் ஆகஸ்டு 16, 1947 என்கிற படத்தை தயாரித்திருந்தார். கடந்த 3 வருடங்களாக சில கதைகளை அவர் எழுதியிருக்கிறார். அதில் முதல் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இது சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாகும். சமீபகாலமாக ஹிந்தி, தெலுங்கு,மலையாளம் ஆகிய மொழி நடிகர்களையும் தமிழ் படங்களில் நடிக்க வைப்பது என்பது அதிகரித்து வருகிறார். பேன் இண்டியா படமாக எடுத்தால் எல்லா மாநிலங்களிலும் கல்லா கட்டலாம் என்பதுதான் அதன் உண்மையான நோக்கம்.

இதையும் படிங்க: ஃபர்ஸ்ட் மீட்டிங்கில் அட்லியை பங்கமாக கலாய்த்த அஜித்!.. அட ஒரே பப்பி ஷேமா போச்சே!..

அப்படித்தான் விக்ரம், ஜெயிலர், லியோ ஆகிய படங்கள் வசூலை பெற்றது. தற்போது எஸ்.கே. 23 படத்தில் ஹிந்தி நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அதேபோல், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லாலையும் இப்படத்தில் நடிக்க வைக்க முருகதாஸ் முடிவெடுத்துள்ளார்.

ஏற்கனவே சீதா ராமம் படத்தில் நடித்த மிருனள் தாக்கூர் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இப்போது மோகன்லால் மற்றும் வித்யூத் ஜாம்வால் ஆகியோர் நடிக்கவுள்ளனர். மேலும், இப்படம் ஒரு பக்கா ஆக்‌ஷன் பொழுதுபோக்கு படமாக உருவாகவுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் துவங்கவுள்ளது.

இதையும் படிங்க: டீசர்ல கிரிக்கெட்ட திட்டிட்டு மேட்ச் பாக்க போயிட்டார் தலீவர்!. ரஜினியை கலாய்க்கும் பிரபலம்…

Next Story