Lokesh kanagaraj: தமிழ் சினிமாவில் இதுவரை ட்ரை செய்யாத புதிய முயற்சியாக எல்சியூவை லோகேஷ் கனகராஜ் செய்திருந்தார். ஒரு படத்தின் தொடர்ச்சி மற்றொரு படத்தில் இருக்குமாறு வைத்திருந்த காட்சிகளால் ரசிகர்கள் பெரிதும் கவரப்பட்டனர். தற்போது மேலும் ஒரு புதிய முயற்சியை லோகேஷ் கையாள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட கடைசியில் விக்ரம் கமலை பேச வைத்திருந்தது, நெப்போலியன் டயலாக்கில் தில்லி என்ற பெயரை இணைத்து அதை எல்சியூ வட்டத்திற்குள் கொண்டு வந்தார். ஆனால் படம் பெரிய அளவில் பேசப்படவில்லை.
இதையும் படிங்க: அந்த குழந்தையே நீங்கதான் சார்!.. ஜிதர்தண்டா-வுக்கும் ‘டபுள் எக்ஸ்’சுக்கும் இப்படி ஒரு தொடர்பா?..
இதனால் தற்போது மேலும் ஒரு ஐடியாவை லோகேஷ் செய்ய இருக்கிறார். அதன்படி தன்னுடைய உதவி இயக்குனர்களை வைத்து எல்சியூ கனெக்ட் ஆகும் திரைப்படங்களை இயக்க இருக்கிறாராம். இது மேலும் ஒவ்வொரு முதன்மை கதாபாத்திரம் குறித்த படமாக அமையும். இதனை படமாகவோ, வெப் சீரிஸாகவே எடுக்கும் ஐடியாவில் இருக்கிறார்களாம்.
இந்த படங்களில் லியோ மற்றும் விக்ரம் படத்தில் வாய்ப்பை இழந்த டாப் ஹிட் ஹீரோக்களை களமிறக்கும் முயற்சியில் இருக்கிறார்களாம். இதனால் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் மேலும் விரிவாகும். அதன் இறுதியாக லோகேஷின் இயக்கத்தில் ரோலக்ஸ், கைதி2 மற்றும் விக்ரம் 3 ரிலீஸாகும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கிளா களமிறங்கும் சித்தார்த்.. இந்த வார ஓடிடி ரிலீஸ்… எதில் தெரியுமா?
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…
இயக்குனர் அட்லீ…