Cinema History
ஏடாகூடமான கேள்வியை கேட்ட நிருபர்!.. எம்.ஆர்.ராதா சொன்ன பதில் என்ன தெரியுமா?…
எம்.ஆர் ராதா என்றால் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வருவது அவரின் துணிச்சல்தான். எப்போதும் யாருக்காகவும் அவர் பயந்ததோ, பணிந்ததோ கிடையாது. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார். தனது நாடகங்களில் கூட மூட நம்பிக்கைகளையும், கடவுள் நம்பிக்கைகளையும் படுமோசமாக கிண்டலடிப்பார். இதனால் அவருக்கு பல எதிர்ப்புகள் வந்தது. ஆனால், அதையெல்லாம் திறமையாக சாமாளித்து அவர் நாடகம் நடத்தினார்.
பல வருடங்களாக நாடகங்களில் நடித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர் இவர். தலையை ஆட்டி ஆட்டி, வித்தியாசமான உடல் மொழியில் இவர் பேசும் வசனங்கள் தியேட்டரில் விசில் பறக்கும். குறிப்பாக ரத்தக்கண்ணீர் படத்தில் இவரின் நடிப்பும், இவரின் பேசிய வசனங்களும் பல வருடங்களை தாண்டி இப்போது சமூகவலைத்தளங்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியாகி வருகிறது.
இதையும் படிங்க: கவுண்டமணியா வேண்டவே வேண்டாம்..! இவரை போடுங்க அடம்பிடித்த பிரபல நடிகர்கள்..!
ஒரு பிரச்சனையில் எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு சிறைக்கு சென்றார். நானும் சுட்டேன்.. அவனும் சுட்டான். என தைரியமாக நீதிமன்றத்தில் பேசியவர். சிவாஜியின் புதிய கார் மீது இவர் சாய்ந்து நின்று கொண்டிருக்க அங்கு வந்த சிவாஜி ‘இது காஸ்ட்லி கார் இதிலெல்லாம் சாய்ந்து நிக்காத’ என சொல்ல அடுத்த நாளே புதிதாக அதே காரை வாங்கி அதில் வைக்கப்போரை ஏற்றுக்கொண்டு சிவாஜியின் முன்பு ஓட்டி காட்டியவர்.
ஒருமுறை இவரின் நிருபர் ஒருவர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என கேட்க. அதற்கு எம்.ஆர்.ராதா ‘இப்படி கேள்வி கேட்கும் உன்னை தூக்கில் போடுவேன்’ என பதில் சொன்னாராம்.
அதுதான் எம்.ஆர்.ராதா!.
இதையும் படிங்க: டைட் ஜாக்கெட்டில் பிதுங்கி வழியுது!.. மாராப்ப விலக்கி காட்டி மனச கெடுக்கும் பிரக்