Connect with us
rah

Cinema History

இளையராஜாவுக்கு 20 வருஷம்தான்! இது ரஹ்மானின் ராஜ்ஜியம்: அப்போதே சொன்ன எம்.எஸ்.வி

80களுக்குப் பிறகு தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சி ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. நடிகர், நடிகைகள் அதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தாலும் அந்த காலகட்டத்திற்கு பிறகு தோன்றிய இயக்குனர்களும், இசை அமைப்பாளர்களும் முக்கிய பங்கு வகித்தனர். அதற்கு முன்பு வரை எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆகியவர்களின் இசையிலேயே சினிமா பயணப்பட்டு வந்து கொண்டு இருந்தது .ஆனால் 80 களுக்கு அப்புறம் இளையராஜா என்ற ஒரு மனிதர் தமிழ் சினிமாவையே தன் கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்.

rah1

rah1

புதுமையை புகுத்தியவர்

அன்றைய காலகட்டத்தில் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர். இவரும் சினிமாவை ஒரு முற்போக்கான சிந்தனையில் கொண்டு செலுத்தினார். கே பாலச்சந்தர் அன்றைய காலகட்டத்தில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வந்தார். இந்த நிலையில் பாலச்சந்தர் உடன் இளையராஜா சிந்து பைரவி என்ற படத்தின் மூலம் முதன் முதலில் இணைந்தார்.

அதன் பிறகு இளையராஜா பாலச்சந்தர் என்ற கூட்டணி ஒரு அசைக்க முடியாத கூட்டணியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தது. மனதில் உறுதி வேண்டும் புன்னகை மன்னன் போன்ற பாலச்சந்தர் இயக்கிய ஆறு படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார். அதுமட்டுமில்லாமல் கவிதாலயா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் வெளிவந்த 14 படங்களுக்கும் இளையராஜா இசை அமைத்திருந்தார்.

rah2

rah2

பாலசந்தர் – இளையராஜா மோதல்

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. இவர்கள் கூட்டணியில் விரிசல் ஏற்பட தொடங்கியது. ஆனால் இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்பது சரிவர தெரியாத நிலையிலும் பிரபல எழுத்தாளர் சுரா ஒரு காரணத்தை கூறினார். ஆடியோ ரைட்ஸ் பிரச்சனையில் ஏதோ பாலச்சந்தருக்கும் இளையராஜாவுக்கும் பிரச்சனை ஏற்பட்டதாம். அது கடைசியில் பண பிரச்சனையாக மாறி இருக்கிறது .கொடுக்கல் வாங்கலில் ஏதோ இருவருக்குள்ளும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டதாம். அதிலிருந்து பாலச்சந்தரும் இளையராஜாவும் ஒன்றாக பணியாற்றுவதை நிறுத்திக் கொண்டார்களாம்.

இந்த நேரத்தில்தான் கவிதாலயா புரொடக்ஷன் சார்பில் ரோஜா படத்தை மணிரத்னம் இயக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. அப்போது அந்த படத்திற்கு யாரை இசையமைப்பாளராக போடலாம் என அனைவரும் திகைத்து கொண்டு இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில் எல்லா இசையமைப்பாளர்கள் இடமும் கீபோர்டு வாசிப்பாளராக இருந்தவர் திலீப் என்ற ஏ ஆர் ரகுமான். அவரை ஏற்கனவே மணிரத்தினம் நன்கு அறிந்து வைத்திருந்தாராம் .உடனே பாலச்சந்தரிடம் ஏ ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் மணிரத்தினம்.

rah3

rah3

வித்தியாசமான இசை

அதன் பிறகு தான் ரோஜா படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் அறிமுகம் ஆகினார். அதுவரை இளையராஜாவின் இசையிலேயே பயணம் செய்த ரசிகர்கள் ஒரு புதுவிதமான இசையை நுகரத் தொடங்கினர். அது ஒரு உணர்வை தமிழ் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது இந்தப் படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் மக்களிடம் ஒரு நல்ல ரீச்சை பெற்றார். இந்த சமயத்தில்தான் எம்.எஸ்.விஸ்வநாதன் ஒரு செய்தியை கூறினாராம். அதாவது “எங்களுடைய காலம் 20 வருடங்கள்தான். அவரையும் ராமமூர்த்தியையும் சேர்த்து கூறியிருக்கிறார். அதேபோல இளையராஜாவின் காலமும் 20 வருஷம் தான். இது ஏ.ஆர்.ரகுமானின் காலம். அது இனிமையாக தொடங்கட்டும் “என்று ஒரு சமயம் கூறினாராம். இந்த செய்தி தொகுப்பை நமக்காக கூறியவர் பிரபல கதாசிரியர் சுரா.

இதையும் படிங்க : சரோஜாதேவியை அதிமுகவில் சேர்க்க எம்.ஜி.ஆர் ஆசைப்பட்டாரா?.. நடந்தது இதுதான்!…

google news
Continue Reading

More in Cinema History

To Top