இதனால்தான் கமல் படத்தை இயக்கவில்லை!.. உண்மையை உடைத்து சொன்ன முருகதாஸ்!…

murugadas
தமிழ் சினிமாவை பொறுத்தவரை எல்லா இயக்குனர்களுக்கும் எப்படி ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்குமோ அதேபோல் கமல்ஹாசனை இயக்க வேண்டும் என்கிற எண்ணமும் வரும். ஆனால், ரஜினி, கமல் படங்களை இயக்கும் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. ஏனெனில், பெரும்பாலும் இவர்கள் தங்களுக்கு மிகவும் நெருக்கமான சீனியர் இயக்குனர்களுடன் இணைந்துதான் வேலை செய்வார்கள்.

ஆனால், சமீபகாலமாக எல்லாம் மாறி வருகிறது. ஒரு படத்தை இயக்கிய தேசிங்கு ராஜா, டான் என்கிற ஒரு படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி ஆகியோருக்கு கூட ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. அதேபோல் மூன்று ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகாரஜுக்கும் அந்த வாய்ப்பு வந்தது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலும் விக்ரம் படத்தில் நடித்து பெரிய வெற்றியை கொடுத்துள்ளார். அடுத்து கமலை இயக்கும் இயக்குனர் பெயரின் பட்டியலில் ஹெச்.வினோத்தின் பெயரும் இருக்கிறது.

ஆனால், அஜித்தை வைத்து தீனா, விஜயகாந்தை வைத்து ரமணா, விஜயை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் கமலை வைத்து இதுவரை படம் இயக்கவில்லை. இதுபற்றி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய முருகதாஸ் ‘டாப் 20 இயக்குனர்கள் பட்டியலை எடுத்தால் அவர்களின் சிறந்த படங்கள் கமல் சார் நடித்த படமாகவே இருக்கும். பாலச்சந்தர், கே.விஸ்வநாதன் பாலுமகேந்திரா, பாரதிராஜா, மணிரத்னம், கவுதம் மேனன் என யாரை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள். அவர்களின் திரைவாழ்வில் எடுத்த சிறந்த படங்களில் கமல் இருப்பார். அதனால்தான் அவரை வைத்து படம் எடுப்பதில் எனக்கு பயம் உண்டு. அதனல்தான் அந்த தேர்வையே நான் எழுதவில்லை’ என தெரிவித்துள்ளார்.