அவ்ளோ பாசத்தை வச்சேன்! இப்படி மோசம் பண்ணுவாருனு எதிர்பாக்கல - சிவகார்த்திகேயனால் விரக்தியடைந்த இமான்

by Rohini |   ( Updated:2023-10-17 00:00:21  )
siva
X

siva

Sivakarthikeyan vs Iman : தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வந்து இப்பொழுது வெள்ளித்திரையில் ஒரு மாஸ் ஹீரோவாக தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

விஜய், அஜித் இவர்களுக்கு பிறகு அனைவரும் கொண்டாடப்படும் நடிகராகவும் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். விஜய்க்கு அடுத்தப் படியாக சின்னக் குழந்தைகள் விரும்பும் நடிகராக சிவகார்த்திகேயன் இருக்கிறார்.

தற்போது ராஜ்கமல் புரடக்‌ஷனில் சாய்பல்லவியுடன் ஒரு படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயனை பற்றிய ஒரு புதிய சர்ச்சை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் இமானுக்கு ஒரு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்துவிட்டார் என்ற செய்திகள் தீயாய் பரவுகிறது.

அதே வேளையில் இது பற்றி இமான் ஒரு பேட்டியில் அவரே சில அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்திருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் சிவகார்த்திகேயனை புகழின் உச்சிக்கு கொண்டு சென்ற படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரு விதத்தில் இமான் இசையில் அமைந்த பாடல்களும் ஒரு காரணம். அதன் பிறகு ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படஙகளுக்கு சூப்பர் ஹிட்டான பாடல்களை கொடுத்தார் இமான்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: ராதிகாவால் ரோட்டுக்கு வந்த கோபி… அதான் நெஞ்சு வலி ட்ராமாவோ?

ஆனால் அதன் பின் சிவகார்த்திகேயனும் இமானும் எந்த படத்திலும் கூட்டணி அமைக்கவில்லை. இது பற்றி இமான் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

அதற்கு சிவகார்த்திகேயன் எனக்கு செய்த துரோகம் தான் என்றும் அவர் மீது நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் அதை அவர் கொஞ்சம் கூட நினைக்காமல் எனக்கு துரோகம் இழைத்துவிட்டார் என்றும் இனிமேல் அவருடன் சேர்ந்து படம் என்பது கிடையவே கிடையாது என்றும் கூறினார்.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் அவ்ளோ மோசமானவரா?.. ஏற்கனவே அந்த பிரபலம் எச்சரித்தாராமே.. இது தெரியாம போச்சே!..

அதுமட்டுமில்லாமல் இந்த துரோகத்தை பற்றி சிவகார்த்திகேயனிடமே தான் கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதிலை பற்றி நான் இப்போது உங்களிடம் கூற இயலாது என்றும் அப்படியே கூறினாலும் அது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்றும் இமான் கூறினார்.

ஆனால் ஒரு பக்கம் இமானின் முதல் மனைவி விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்ற செய்தியும் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முன்பு ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் ‘பணம் சம்பாதிக்க வில்லை என்றாலும் பரவாயில்லை. கெட்டப் பெயர் சம்பாதிக்கவே கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். அதுதான் நான் என் அம்மாவுக்கு செய்கிற மிகப்பெரிய கடமை’ என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: நள்ளிரவில் லியோ நடத்திய சாதனை!.. அடேங்கப்பா ஒரே ரத்த களறியா இருக்கே.. பாக்ஸ் ஆபிஸ் பிச்சிக்கப்போகுது!..

இப்படி இருக்கும் சிவகார்த்திகேயனை பற்றி இன்று இணையம் முழுவதும் ஒரு தவறான செய்திகள் பரவிக் கொண்டு வருகிறது. இன்னும் சிலர் இமானை வறுத்தெடுக்கிறார்கள். அதாவது இமான் சொல்வது உண்மையென்றால் அப்படி என்ன துரோகம் செய்தார் என்று வெளிப்படையாக சொல்ல வேண்டியது தானே என்றும் கூறிவருகிறார்கள்.

Next Story