More
Categories: Cinema News latest news

நடிகனாக இருப்பதை விட அதுதான் பெரிய சந்தோஷம்! ரஜினி சொன்ன சீக்ரெட்

Actor rajini: தமிழ் சினிமாவில் ரஜினி எப்பேற்பட்ட் செல்வாக்கு மிக்க நடிகராக இருக்கிறார் என அனைவருக்கும் தெரியும். ஒரு சூப்பர் ஸ்டாராக அனைவரையும் 80களில் இருந்து இன்று வரை பரவசப்படுத்திக் கொண்டே வருகிறார் ரஜினி.

ஒரு சாதாரண பஸ் கண்டக்டராக இருந்தவர் எப்படி இந்தளவுக்கு ஒரு பெரிய ஆளுமையாக மாறினார் என்பதை பற்றி பல செய்திகள் வெளிவந்தன. பஸ் கண்டக்டராக இருக்கும் போதே ரஜினி ஒரு சில நாடகங்களில் நடித்து தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Advertising
Advertising

இதையும் படிங்க: இப்படி நின்னா கண்ட்ரோல்லாம் காணாம போயிடும்!.. இளசுகளை சோதிக்கும் யாஷிகா ஆனந்த்..

அதன் பிறகே மேற்கொண்டு நடிப்பை பற்றி அறியவே சென்னை வந்து பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பை கற்றுக் கொண்டிருக்கிறார். அதன் விளைவாகத்தான் அபூர்வ ராகங்கள் படத்தில் முதன் முதலில் தன்னுடைய அறிமுகத்தை பதிவு செய்திருக்கிறார் ரஜினி.

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த ரஜினியை பைரவி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக்கி அழகுபார்த்தவர் கதாசிரியர் கலைஞானம்.அந்தப் படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடிக்க ஆரம்பித்தார் ரஜினி.

இதையும் படிங்க: விஜய்யை விடாமல் துரத்தும் ரஜினி?.. லியோ அப்டேட்டுக்கு போட்டியாக எதை இறக்கியிருக்காரு பாருங்க!..

ரசிகர்களும் அவரை கொண்டாட ஆரம்பித்தனர். திரையுலகமும் அன்று வரை ஒரு சாதாரணமான நடிப்பை மட்டுமே வெளிப்படுத்திய நடிகர்களை மட்டுமே பார்த்து வந்த நிலையில் ரஜினியின் ஸ்டைலும் நடிப்பும் கொஞ்சம் அதிகமாகவே கவர்ந்தது.

இப்படி தொடர்ந்து வெற்றியின் பாதையை நோக்கியே ரஜினி தன் பயணத்தை தொடர ஆரம்பித்தார்.இந்த நிலையில் ஒரு பேட்டியில் ரசிகர் ஒருவர் நீங்கள் நடிக்க வராமல் இருந்தால் என்னவாகியிருப்பீர்கள் ? என்ற கேள்வியை கேட்டார்.

இதையும் படிங்க: நயன்தாரா பார்த்தா நொந்து நூடுல்ஸ் ஆகிடுவாங்க!.. என்ன கொடூரம் புஷ்பா இது? கடுப்பான ஃபேன்ஸ்!

அதற்கு பதிலளித்த ரஜினி ‘ஒரு வேளை நான் நடிக்க வராமல் இருந்திருந்தால் டிராஃபிக் கண்ட்ரோலராக இருந்திருப்பேன். அப்படி இருந்திருந்தால் ஒரு நடிகனா இப்ப இருக்கிற சந்தோஷத்தை விட இன்னும் அதிகமாக சந்தோஷமாக இருந்திருப்பேன்’ என்று கூறியிருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts