செய்யக் கூடாததை எல்லாம் செய்ய வைத்த மிஷ்கின்! யாருக்கு நடக்கும் இந்த அவலம்? - பாண்டியராஜன் பட்ட வேதனை
Pandiarajan vs Mysskin: தமிழ் சினிமாவில் பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து வந்தவர் பாண்டியராஜன். கன்னி ராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாண்டியராஜன் அடுத்த இரண்டாவது படத்திலேயே ஹீரோவாகவும் நடித்தார். அதுதான் ஆண்பாவம் திரைப்படம்.
அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்ததே காதல் கசக்குதயா என்ற பாடல்தான். இந்தப் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்தார் பாண்டியராஜன்.
இதையும் படிங்க: ராம்சரணுக்கும் பெப்பே… தனுஷுக்கும் பெப்பே… லியோவில் நடந்த திடீர் ட்விஸ்ட்..!
இயக்கியது ஒன்பது படங்கள்தான். ஆனால் நடிகராக 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அதில் பெரும்பாலான படங்கள் வெற்றியையே பெற்றிருக்கிறது. தனது உருவத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தார் பாண்டியராஜன்.
சமீபகாலமாக பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்து ஹிட்டடித்த படங்களில் அஞ்சாதே திரைப்படமும் ஒன்று. மிஷ்கின் இயக்கிய அந்தப் படத்தில் வில்லனாக நடித்திருப்பார் பாண்டியராஜன்.
இதையும் படிங்க: ஒருதலைக் காதலால் வெட்டுக் குத்து வாங்கிய ‘குட் நைட்’ பட நடிகை! அந்த நிலையிலும் அவர் செய்த செயல்
என்ன எப்படியா வில்லனாக மக்கள் ரசிப்பார்கள் என்று கேட்க எப்படியோ சமாதானம் செய்து விட்டார் மிஷ்கின். சரி அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என பாண்டியராஜன் கேட்டாராம். முதலில் மீசையை எடுக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் மிஷ்கின்.
போடா என்று சொல்லிவிட்டு என்னுடைய 17 வயதில் வச்ச மீசை இது. இதுவரை நான் எடுத்ததே இல்லை என்று பாண்டியராஜன் சொல்லியிருக்கிறார். அப்போ இதுதான் எனக்கு வேண்டும் என்று மீசையை எடுக்க சொல்லிவிட்டாராம்.
இதையும் படிங்க: ஜெயிலர் வடை வாயன்களுக்கு.. நல்லா வயிறு எரியட்டும்டா.. லியோ படைத்த சாதனை.. ப்ளூ சட்டை மாறன் ஜால்ரா!..
இதனால் படம் முழுக்க மிஷ்கினை முறைத்துக் கொண்டுதான் இருந்தாராம். எப்படியோ படம் முடிந்து ரிலீஸாகி மூன்றாவது நாள் சக்க போடு போட்டுக் கொண்டிருந்ததாம் . மிஷ்கினை தன் அலுவலகத்திற்கு அழைத்த பாண்டியராஜன் மிஷ்கினுக்கு மோதிரத்தை பரிசளித்து எப்படி நடந்துச்சுனே தெரியல என்று சொன்னாராம்.
மிஷ்கினும் எனக்கும் எப்படி இந்தப் படம் வெற்றி அடைஞ்சதுனு தெரியல என்று சொல்லி சிரித்தாராம்.