இதுக்கே தூக்கு மாட்டித் தொங்கிருக்கனும்! அலட்சிய பேச்சால் மிஷ்கினுக்கு வந்த சிக்கல்

by Rohini |   ( Updated:2024-08-14 05:20:05  )
mysskin
X

mysskin

Mysskin: கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக நடிகராக இருப்பவர் மிஷ்கின். மிஷ்கின் என்றாலே சர்ச்சைக்கு பேர் போனவர். சமீபத்தில் கொட்டுக்காளி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசியது பெரிய பேசு பொருளாக மாறியிருக்கிறது. மிஷ்கின் என்றாலே இவ்வளவுதானா என்ற அளவுக்கு அவரின் நிலைமை ஆகிவிட்டது.

இதை பற்றி வலைப்பேச்சு அந்தணன் மிஷ்கினை கடுமையாக சாடி பேசியிருக்கிறார். கூல் சுரேஷ் மாதிரியான ஆள்களுக்கு சில கூட்டம் இருக்கும். அதற்கு காரணம் கூல் சுரேஷ் மேடை நாகரிகம் தெரியாமல் வாய்க்கு வந்ததை பேசுபவர். அதனால் அவரை பின்பற்றி பல கூட்டம் சுற்றுகிறது. மிஷ்கின் கூல் சுரேஷை விட ஒரு படி மேலாகவே போய்விட்டார்.இதுக்கே அவர் தூக்கு மாட்டி தொங்கணும்.

இதையும் படிங்க: ஒன்னுல மூணு… வென்ற முத்து, மீனா… வீட்டை விட்டு வெளியேறிய எழில்… கண்ணீரில் ராஜீ…

ஏனெனில் கூல் சுரேஷுடன் ஒப்பிட்டு பேசுகிற அளவுக்கு அவர் நிலைமை வந்து விட்டது என ஃபீல் பண்ண வேண்டும். இப்படியே பேசிக் கொண்டே போனால் அவருடைய படமும் பாதிக்கப்படும். பிசாசு, சைக்கோ போன்ற தரமான படங்களை கொடுத்தவர்தான் மிஷ்கின். ஒரு படைப்பாளியாக அவரை எந்தவிதத்திலும் குறைசொல்ல முடியாது.

மேலும் பல வெளிநாட்டு எழுத்தாளர்களின் நூல்களை படித்தவர். தான் படித்த நூல்களை பற்றி கூட மேடையில் பேசுவதில்லையே. மேடை நாகரிகம் என்பதே மிஷ்கினுக்கு இல்லை. கொட்டுக்காளி படத்தை பார்க்காவிட்டால் நான் அவுத்துப் புட்டு ஆடுவேன் என்று கூறியிருக்கிறார் மிஷ்கின்.

இதையும் படிங்க: அந்தகன் படத்துல என்ன பண்ணி வச்சிருக்கீங்க நவரச நாயகனை…? பொங்கி எழும் பிரபலம்…!

இன்னும் சில கெட்டவார்த்தைகள் எல்லாம் போட்டும் பேசியிருக்கிறார். நல்ல வேளை படங்களுக்கு சென்சார் வந்தது. இல்லையென்றால் மேடையில் இவ்ளோ பேசும் மிஷ்கின் அவர் படங்களில் எந்தளவு கெட்ட வார்த்தைகளை பயன்படுத்துவார் என்று நினைக்கும் போது பயமாகத்தான் இருக்கிறது.

மேலும் சூரி கொட்டுக்காளி படத்தில் ஒரு யூரின் போகிற காட்சியில் நடித்ததை பற்றி விளக்கியிருந்தார் மிஷ்கின். அதாவது அந்த காட்சியில் யூரின் போகும் போது அப்படி காட்மாட்டாங்களா? இப்படி காட்டமாட்டாங்களா என்ற ஒரு ஆர்வம் தனக்கு இருந்ததாக கூறினார். இதை பார்க்கும் போது மிஷ்கின் எப்படிப்பட்டவர் என்றே தெரியவில்லை.

kottu

kottu

சிகரெட் பிடிப்பதால் நம் ஆயுளில் 10 நாள்கள் குறைகின்றது. நானும் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டேன். இது ஒரு நல்ல கருத்துதான். ஆனால் கோயிலுக்கு போய் தட்சனை கொடுப்பது, பரிகாரம் செய்வது என காசை வீணாக்காமல் அந்த காசுக்கு படம் பாருங்கள் என்று மிஷ்கின் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: தயாரிப்பாளரிடம் சவால் விட்ட எம்ஜிஆர்… 100 ரூபாய் பந்தயத்தில் ஜெயிச்சது யாரு?

பல கெட்டவர்கள் ஒரு நாளைக்காவது நல்லவர்களாக இருப்பார்கள் என்றால் அது கோயிலில் மட்டும்தான். அதையும் கெடுக்கும் விதத்தில் மிஷ்கின் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது என வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார்.

Next Story