மிஷ்கின் செய்யும் அலப்பறை!.. மாட்டிக்கொண்டு முழிக்கும் விஜய் சேதுபதி!.. கதறும் தயாரிப்பாளர்!..
பொதுவாக சினிமா இயக்குனர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். இதில் மிஷ்கின் முக்கியமானவர். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தார். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் அவர் இயக்கிய அஞ்சாதே படமும் சூப்பர் ஹிட். தனது படங்களில் வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை காட்டுவதில் மிஷ்கின் கில்லாடி. அஞ்சாதே படத்தில் கதாபாத்திரத்தின் கால்களை காட்டியே சில காட்சிகளை எடுத்திருப்பார். இப்படி ஒவ்வொரு படத்திலும் ஒரு விஷயத்தை அவர் செய்வார்.
இதையும் படிங்க: அந்த மாதிரி ஒரு பாட்டு வேணும்!. இசைஞானியிடம் கேட்ட கமல்!. குணா பட பாடல் உருவானது இப்படித்தான்!.
நந்தலாலா, பிசாசு, முகமுடி, துப்பறிவாளன், சைக்கோ, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், யுத்தம் செய் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஆண்ட்ரியாவை வைத்து பிசாசு 2 படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். ஆனால், அந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஒருபக்கம் பல திரைப்படங்களிலும் நடித்தும் வருகிறார். லியோ படத்திலும் நடித்திருந்தார். அதேபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இப்போது கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் ட்ரெய்ன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
இதையும் படிங்க: டான்ஸ் இருக்கனும்.. ஃபைட் இருக்கனும்! கதை இருக்கனுமே.. கமெர்ஷியலை நம்பி கோட்டை விடும் லாரன்ஸ்
இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையில் நடந்து வருகிறது. பொதுவாக பெரும்பாலான இயக்குனர்கள் முதல் காட்சியை காலை 7 மணிக்கே எடுத்துவிடுவார்கள். அதேபோல், இறுதிக்காட்சியை 6 மணிக்குள் முடித்துவிடுவார்கள். தேவைப்பட்டால் அரை மணி நேரம் மட்டும் அதிகமாகும்.
ஆனால், டிரெய்ன் படப்பிடிப்பில் காலை 11 மணிக்கு பின்னர்தான் முதல் காட்சியை மிஷ்கின் எடுக்கிறாராம். அதேபோல், இரவு வரை படப்பிடிப்பை நடத்துகிறாராம். 6 மணிக்கு மேல் வேலை செய்தால் தொழிலாளர்களுக்கு இரண்டு பேட்டாக்கள் கொடுக்க வேண்டும். சில சமயம் அது 3 பேட்டாவாகவும் மாறும். பட்ஜெட்டில் இதுவே அதிக தொகை வருவதால் தயாரிப்பாளர் கதறி வருகிறாராம். ஒருபக்கம், விஜய் சேதுபதியும் மிஷ்கினிடம் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறாராம்.
இதையும் படிங்க: வாய்ப்பு கொடுத்தும் அசிங்கப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த்… நிலைகுழைய வைத்த அந்த இயக்குனர்…