இவ வயித்துல பொறக்கனும்னு ஆசைப்படுறேன்! நடிகையை பற்றி கண்ணீர் விட்ட மிஷ்கின்

Published on: January 25, 2024
myskin
---Advertisement---

Director Mysskin: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் நடிகரும் இயக்குனருமான மிஷ்கின். இவரின் இயக்கத்தில் பல திகிலூட்டும் படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நன் மதிப்பை பெற்றிருக்கிறார். சைக்கோ , பிசாசு போன்ற படங்கள் மிஷ்கின் பெருமையை பறைசாற்றும் படங்களாக அமைந்தவை.

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிப்பிலும் மிரட்டி வருகிறார் மிஷ்கின். சமீபத்தில் விஜயின் லியோ படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அமோக வரவேற்பை பெற்றார் மிஷ்கின். இன்னும் கொஞ்ச சீன்களில் அவரை காட்டியிருக்கலாமோ என்ற ஆர்வத்தையும் லியோ படத்தில் வரவழைத்தார் மிஷ்கின்.

இதையும் படிங்க: சும்மா சொல்லக்கூடாது!.. நீ அவ்ளோ அழகு!.. கோட் பட நடிகையிடம் ஜொள்ளுவிடும் ஃபேன்ஸ்..

இந்த நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு புதிய படம் வரவிருக்கிறது. டெவில் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் அந்தப் படத்தில் நடிகை பூர்ணிமா ஒரு லீடு ரோலில் நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேலாக நடித்து புகழ்பெற்றவர் பூர்ணா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிப் படங்களிலும் ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

பூர்ணாவுக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்த படமாக சவரக்கத்தி படம் அமைந்தது. அந்தப் படத்திலும் மிஷ்கின் நடித்திருந்தார். இப்போது இந்த டெவில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அப்போது பேசிய மிஷ்கின் பூர்ணாவின் வயிற்றில் ஒரு பிள்ளையாக பிறக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அந்தளவுக்கு ஒரு அருமையான பெண்மணி பூர்ணா என அங்கு இருந்த பூர்ணாவை கண்ணிர் விட வைத்தார் மிஷ்கின்.

இதையும் படிங்க: கருப்பா இருக்க.. எப்படி அஜித் படத்துல? பல தடவை தல படத்தை மிஸ் பண்ண சோகத்தில் நடிகர்

அதுமட்டுமில்லாமல் என்னையும் பூர்ணாவையும் பற்றி தவறாக எழுதினார்கள். ஆனால் அதெல்லாம் தாண்டி நல்ல பெண். நல்ல நடிகை. அவளுக்கு திருமணம் என்று சொன்னதும் முதலில் கோவப்பட்டேன். ஏன்டி இன்னும் 5 வருடம் நடித்துவிட்டு திருமணம் செய்திருக்கலாமே என்று கோவப்பட்டேன் என மிஷ்கின் கூறினார். அவர் நடிப்பு அந்தளவுக்கு பிரமிப்பை ஏற்படுத்தும் என பூர்ணாவை பற்றி பெருமையாக பேசினார் மிஷ்கின்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.