Cinema News
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா! ‘கோட்’ படத்தின் தெலுங்கு ரைட்ஸை கைப்பற்றும் முயற்சியில் அஜித் பட நிறுவனம்
Ajith Vijay: விஜய் நடிப்பில் தயாராகி கொண்டு வரும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் மீனாட்சி சவுத்ரி சினேகா ஆகியோர் நடிக்கும் இந்த படத்தில் பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் மோகன் போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பு இந்த படத்தின் மீது இருந்து வருகிறது. இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கான பிசினஸ் ஆரம்பித்துவிட்டது. கோட் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இதனுடைய தெலுங்கு ரைட்ஸை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கைப்பற்றும் என்ற ஒரு தகவல் கோடம்பாக்கத்தில் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: கொஞ்சம்தான் மூடியிருக்கேன்!.. சீக்கிரம் பாருங்க!.. ரசிகர்களை மூடேத்தும் மாளவிகா மோகனன்!..
அதனால் மைத்ரி மூவி மேக்கர்ஸுடன் பட குழு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே மைத்ரி மூவி மேக்கர்ஸ் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரிக்கிறது என அனைவருக்குமே தெரியும். அதனால் ஒரு கையில் அஜித் படம். இன்னொரு கையில் விஜய் படம் என மைத்ரி மூவி மேக்கர்ஸுக்கு ஒரு லம்பான ஆஃபர் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
கோலிவுட்டில் இரு பெரும் நட்சத்திரங்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். இவர்களின் படங்களுக்கு ஒரு பெரிய ஓப்பனிங் எப்பொழுதுமே இருக்கும். அந்த வகையில் இருவரின் படங்களும் போட்டி போட்டுக் கொண்டு ரிலீஸ் ஆகும் பட்சத்தில் திரையரங்குகள் கலெக்ஷனை பெரிய அளவில் அள்ளும் என்றுதான் சொல்ல வேண்டும்.
இதையும் படிங்க: தனுஷ் அதை செய்வார்னு நான் எதிர்பார்க்கவே இல்ல!.. நெகிழும் வில்லன் நடிகர்…
இந்த நிலையில் கோட் திரைப்படத்தின் தெலுங்கு ரைட்ஸ் மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்திற்கு சென்றால் இன்னொரு பக்கம் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி திரைப்படத்தை தயாரிக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்துக்கு பெரும் லாபம் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என்பதைப் போல இந்த நிறுவனத்தைப் பற்றி தான் இப்போது கோடம்பாக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகின்றன.