Cinema News
50 கோடியும் இல்ல!.. கல்யாண கேசட்ட விற்கவும் இல்ல!.. நாகசைதன்யா திருமணம் குறித்து வெளிவந்த உண்மை!..
நடிகர் நாகசைதன்யா மற்றும் சோபிதா திருமணத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 50 கோடிக்கு வாங்கி இருப்பதாக வெளியான தகவல் வதந்தி என கூறப்படுகிறது.
தெலுங்கு சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகசைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகன் ஆவார். இவர் நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பின்னர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையும் படிங்க: பாரதிராஜா படத்தில நடிக்கறது எவ்ளோ பெரிய விஷயம்..! ஷோபனா மறுக்க என்ன காரணம்?
இதைத்தொடர்ந்து நடிகர் நாகசைதன்யா கடந்த சில மாதங்களாக நடிகை சோபிதாவை காதலித்து வந்தார். இவர்களது நிச்சயதார்த்தம் மிக எளிமையாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. வரும் டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற உள்ளது.
இதற்கிடையில் நேற்று நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி நிச்சயதார்த்தமும் மிக எளிமையாக நடைபெற்ற முடிந்தது. தற்போது நாகார்ஜுனா குடும்பமே திருமண கொண்டாட்டத்தில் களைகட்டி இருக்கின்றது. இந்நிலையில் இவர்களின் திருமண வீடியோவை netflix நிறுவனம் 50 கோடிக்கு வாங்கி இருப்பதாக நேற்று முதல் தகவல் வெளியாகி வருகின்றது.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண காட்சிகள் அடங்கிய ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடிக்கு விற்பனையானது. நடிகை நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆவணபடத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஓடிடியில் வெளியிட்டு இருந்தார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகை ஹன்சிகா தனது திருமண வீடியோவை டிஸ்னி ஹாட்ஸ்டார்க்கு விற்பனை செய்திருந்தார் .
இதையும் படிங்க: அவர் பண்ணுறதுக்கு என்னை அடிச்சா எப்படி? திடீரென அர்ச்சனா பதிவிட்டு ட்வீட்…
அதேபோல நடிகர் நாகசைதன்யா மற்றும் சோபிதா திருமணமும் netflix நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்கின்ற தகவல் வேகமாக பரவி வந்தது . ஆனால் இது உண்மை இல்லை என்று நாக சைதன்யா தரப்பிலிருந்து தகவல் வெளியாகி இருக்கின்றது.
வரும் டிசம்பர் 4ம் தேதி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற இருப்பதாகவும் தற்போது திருமண சடங்குகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் அவர்களின் திருமண வீடியோவை எந்த நிறுவனத்திற்கும் அவர்கள் விற்பனை செய்யவில்லை என்பது உறுதியாகி இருக்கின்றது.